

ஐந்து மாநிலத் தேர்தல்
Pondichery Assam Kerala Assembly Electionஇ, Nomination Ends : 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, புதுச்சேரி, கேரளா, அசாமில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்படுகிறது.
மூன்று மாநிலங்களில் வேட்புமனு
புதுச்சேரி, கேரளா, அசாமில் கடந்த 16ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுநாளே இந்தப் பணிகள் துவங்கியதால், அரசியல் களம் பரபரப்புடன் காணப்பட்டது.
கூட்டணி, தொகுதி பங்கீடு என அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டின. ஒருவழியாக அனைத்தும் முடிந்து, வேட்புமனு தாக்கல் நடந்து முடிந்து இருக்கிறது.
அசாம் மாநிலத்தில் 126 சட்டமன்ற தொகுதிகளும், கேரளாவில் 140 சட்டமன்ற தொகுதிகளும், பாண்டிச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதிகளும் உள்ளன
ஒரே கட்டத் தேர்தல்
அசாம் மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் போட்டி நிலவுகிறது. கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, பாஜக இடையே போட்டி நிலவுகிறது.
பாண்டிச்சேரி தேர்தல்
பாண்டிச்சேரியில் காங்கிரஸ் - திமுக தலைமையிலான கூட்டணிக்கும், என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கும், தவெக-விற்கும் இடையே போட்டி நிலவுகிறது.
நீண்ட இழுபறிக்கு பிறகு, இங்கு கூட்டணி அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக தேர்தலை சந்திக்கும் தமிழக வெற்றிக் கழகம், இரண்டு தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி விட்டு 28 இடங்களில் போட்டியிடுகிறது. நேயம் மக்கள் கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
மனுக்கள் மீது நாளை பரிசீலனை
இந்த 3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இன்று மாலையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.
தகுதியான வேட்பு மனுக்கள் ஏற்கப்படும், தகுதியில்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும்.
மார்ச் 26 கடைசி நாள்
வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 26ம் தேதி கடைசி நாள். அன்று மாலை இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்கள் ஒதுக்கப்படும்.
அனல்பறக்கும் தேர்தல் களம்
பாண்டிச்சேரி ஆட்சியை தக்கவைக்க முதல்வர் ரங்கசாமி முனைப்பு காட்டுகிறார். இந்தமுறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூட்டணியும் முயற்சிக்கிறது.
முதன்முறையாக தேர்தலை சந்திக்கும் தவெகவும் ஆட்சியை பிடிப்பதில் ஆர்வமாக உள்ளது.
அசாமில் ஆட்சியைத் தக்கவைக்க போராடும் பாஜக, கேரளாவில் தனது பலத்தை இந்த தேர்தல் மூலம் நிலைநாட்ட முயன்று வருகிறது.
கேரளாவில் பறிபோன ஆட்சியை மீண்டும் பிடிக்க கேரள காங்கிரஸ் மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
கேரளாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மார்க்சிஸ்ட் கட்சி மிகவும் தீவிரமாக பணியாற்றி வருகிறது.
முழுவீச்சில் தேர்தல் பணிகள்
ஏப்ரல் 9ம் தேதி 3 மாநிலங்களிலும் நடைபெறும் வாக்குப்பதிவிற்கான முடிவுகள் மே 4ம் தேதி வெளியாகும். தேர்தல் பணிகளில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
வாக்குச்சாவடி மையங்கள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் இடங்கள், தேர்தல் நடத்துவதற்கான சாதனங்கள் ஆகியவை தயார்படுத்தப்பட்டு வருகின்றன.
=============