Union Budget 2026 : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாதனை!

Nirmala Sitharaman's ninth consecutive Union Budget 2026-27 : 9வது முறையாக மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா தாக்கல் செய்து சாதனை படைக்க இருக்கிறார்.
Finance Minister Nirmala Sitharaman is set record by presenting Union Budget 2026 27 for 9th time
Finance Minister Nirmala Sitharaman is set record by presenting Union Budget 2026 27 for 9th timeSource : Ministry Of Finance in India
1 min read

இந்திரா காந்தி

This will be Nirmala Sitharaman's ninth consecutive Union Budget 2026-27 : இந்தியாவின் மத்திய பட்ஜெட் வரலாற்றில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது. பிரதமராக இருந்த இந்திரா காந்தி முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன்

பின்னர், நீண்ட இடைவெளைக்கு பிறகு நிர்மலா சீதாராமன் இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்று, பட்ஜெட் தாக்கல் செய்வதில் சாதனைகளை படைத்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் வரலாற்று சாதனை

அவர் 2026 பிப்ரவரி 1 அன்று தனது தொடர்ச்சியாக ஒன்பதாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது ஒரு வரலாற்று சாதனையாகும். மேலும், இந்த பட்ஜெட் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுவது, சுதந்திர இந்தியாவில் முதல் முறையாகும்.

நிதி வரலாற்றில் இரண்டு பெண்கள்

இந்தியாவின் பொருளாதாரப் பாதையை நிர்ணயிக்கும் பட்ஜெட்டை தாக்கல் செய்வது என்பது முக்கியமான ஒரு பணியாகும். இந்த முக்கியப் பொறுப்பை ஆண்கள் மட்டுமே வகித்து வந்த நிலையில், இரண்டு பெண்கள் ( இந்திரா காந்தி, நிர்மலா சீதாராமன் ) இந்தியாவின் நிதி வரலாற்றில் தடம் பதித்து சாதித்துள்ளனர்.

பிரதமர் + நிதியமைச்சர் - இந்திரா காந்தி

இந்திய பட்ஜெட்டை முதன்முதலில் தாக்கல் செய்தவர் இந்திரா காந்தி ஆவார். 1969 ஜூலை மாதம் அவர் பிரதமராக இருந்தபோதே நிதியமைச்சராகவும் பொறுப்பேற்றார். மொரார்ஜி தேசாய் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் நிகழ்ந்தது.

1970 பிப்ரவரி 28 அன்று, அவர் நாடாளுமன்றத்தில் 1970-71ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சமர்ப்பித்தார். அவரது கொள்கைகள் சோசலிச வளர்ச்சி மற்றும் விவசாய தன்னிறைவை மையமாகக் கொண்டிருந்தன.

நிர்மலா சீதாராமன் சாதனை

இந்திரா காந்திக்குப் பிறகு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக எந்தப் பெண்ணும் நிதியமைச்சர் பொறுப்பை ஏற்கவில்லை. 2019ல் நிர்மலா சீதாராமன் இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சராக பொறுப்பேற்று இந்த நிலையை மாற்றினார்.

ஞாயிற்றுக்கிழமை புதிய வரலாறு

2026 பிப்ரவரி 1 அன்று, நிர்மலா சீதாராமன் மீண்டும் ஒரு வரலாற்றுச் சாதனையை படைக்க உள்ளார். அவர் தனது தொடர்ச்சியான ஒன்பதாவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

இதன் மூலம் இவ்வளவு நீண்ட தொடர்ச்சியான பட்ஜெட் தாக்கல் செய்த ஒரே நபர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெறுவார்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in