அகமதாபாத் விமான விபத்து - உடல்கள் டி.என்.ஏ. பரிசோதனை

அகமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
அகமதாபாத் விமான விபத்து - உடல்கள் டி.என்.ஏ. பரிசோதனை
ANI
1 min read

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், 241 பயணிகள் உயிரிழந்தனர்.

தீயில் கருகியதால், அவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ளன.

உடல் பாகங்களை சேகரித்துள்ள தடயவியல் நிபுணர்கள், டிஎன்ஏ எனப்படும் மரபணு பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக, விபத்தில் இறந்த பயணிகளின் உறவினர்கள் தங்களது டிஎன்ஏ மாதிரிகளை வழங்கி வருகின்றனர்.

பயணிகளின் உடைமைகளை வைத்தும் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

இதுவரை அடையாளம் காணப்பட்ட உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

டிஎன்ஏ பரிசோதனை பணிகள் நிறைவடைய 2 வார காலம் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in