வடகிழக்கு மாநிலங்களை புரட்டி போட்ட வெள்ளம் : போக்குவரத்து, ரயில் சேவை முடக்கம் : 22,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

இந்த அதிகனமழையால் அசாமில் சுமார் 22,000-க்​கும் மேற்​பட்​டோர் வீடு, உடமை​களை இழந்து பரித​வித்து வரு​கின்​றனர்
Floods wreak havoc in Northeastern states; transport and rail services disrupted; over 22,000 people affected.
Floods wreak havoc in Northeastern states; transport and rail services disrupted; over 22,000 people affected. twitter
1 min read

வடகிழக்கு மாநிலங்களை புரட்டி போட்ட வெள்ளம்

வடமாநிலங்​களில்  பரு​வ​மழை தீவிரமடைந்து கனமழை மற்றும் வெள்ளம் வடகிழக்கு மாநிலங்களை புரட்டி போட்டியிட்டுள்ளது.இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்கை முடங்கியுள்ளது

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்

குறிப்பாக இந்த பெருவெள்ளத்தால் வடகிழக்கு மாநிலங்களுக்கான அசாம், அருணாச்சல பிரதேசம், சிக்​கிம், மேகாலயா உள்​ளிட்ட வடகிழக்கு மாநிலங்​களில் கடந்த ஒரு வார​மாக கனமழை பெய்து வரு​கிறது.

அசாமின் தேமாஜி, நல்​பாரி, திப்ரூகர், சிரங், லக்​கிம்​பூர், கோக்​ராஜார் மாவட்​டங்​களில் பெரு​வெள்​ளத்தால பலத்த சேதம் அடைந்திருக்கிறது

22,000-க்​கும் மேற்​பட்​டோர் வீடு, உடைமைகளை இழந்து தவிப்பு

தொடர் கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் ,22,000-க்​கும் மேற்​பட்​டோர் வீடு, உடமை​களை இழந்து பரித​வித்து வருகின்றனர். குறிப்பாக 1,690 ஹெக்​டேரில் பயி​ரிடப்​பட்டு இருந்த பயிர்​கள் சேதமடைந்து உள்ளதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது

போக்குவரத்து சேவையிலும் கடுமையான பாதிப்பு

கடுமையாக ஏற்ப்பட்ட இந்த வெள்ள பாதிப்பால் போக்குவரத்து , ரயில் சேவையில் கடுமையான பாதிப்புகள் ஏற்ப்பட்டுள்ளது

குறிப்பாக அசாமின் அர்ச்​சிப​தார் மற்​றும் சிமென் சப்​பாரி ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ஆற்​றுப் பாலம் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்டு உள்ளதால அந்த பகுதிகளில் ரயில் சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது ,

முதல்வர் தெரிவித்துள்ளதாவது

கனமழை​யால் அசாமின் தேமாஜி மாவட்​டம் மிகக் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்டு உள்​ளது. இதுதொடர்​பாக மத்​திய அமைச்​சர் அமித் ஷா தொலைபேசி​யில் என்​னோடு ஆலோ​சனை நடத்​தி​னார். அசா​முக்கு தேவை​யான அனைத்து உதவி​களை​யும் வழங்க அவர் உறுதி அளித்​துள்ளார் என்று தெரிவித்துள்ளார்

கனமழை அதிகரிக்கும் : வானிலை மையம் எச்சரிக்கை

வெள்ள பாதிப்​பால் அங்கு சிக்​கித் தவித்த 30 சுற்​றுலாப் பயணி​கள் ஹெலி​காப்​டர் மூலம் பத்​திர​மாக மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது

தயார் நிலையில் பேரிடர் மீட்பு பணியில் வீரர்கள்

.எதிர்வரும் நாட்களில் இன்னும் அதிகமான் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது , முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தேசிய பேரிடர் மீட்​புப் படை வீரர்​கள், அந்​தந்த மாநிலங்​களின் பேரிடர் மீட்​புப் படை வீரர்​கள் வெள்ள பாதிப்பு பகு​தி​களுக்கு அனுப்​பப்​பட்டு உள்​ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

=======================

logo
Thamizh Alai
www.thamizhalai.in