

தமிழக வெற்றிக் கழகம்
தமிழகத்தில் தவெக என்ற பெயரில் கட்சியை தொடங்கினார், நடிகராக இருந்த விஜய். முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை சந்தித்த அந்தக் கட்சி, 108 இடங்களை கைப்பற்றி, தமிழகத்தில் ஆட்சி அமைத்தது.
தமிழகத்தில் தவெக ஆட்சி
முதல்வராக பொறுப்பேற்று அசத்தினார் ஜோசப் விஜய். ஜென்-ஸி இளைஞர்களின் பேராதரவு, அவருக்கு இந்தியாவில் யாருக்கும் கிடைக்காத வெற்றியை பெற்றுத் தந்தது.
புதுச்சேரி, கேரளத்திலும் தவெக
அண்டை மாநிலமாக புதுச்சேரி சட்டமன்ற தேர்தலிலும் முத்திரை பதித்தது தவெக. இதேபோன்று, கேரளத்திலும் தவெக முனைப்பாக செயலாற்றி வருகிறது.
மேற்கு வங்கத்தில் கால்பதித்த தவெக
தெற்கிலிருந்து கிழக்கு நோக்கிய பயணமாக கேரளாவை தொடர்ந்து மேற்கு வங்கம் மாநிலத்திலும் தவெக கட்சி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
அந்த மாநிலத்தின் கிழக்கு பர்தமானில் உள்ள ஃபாகுபூரில் திறக்கப்பட்டு உள்ளது. இதுவே, மேற்கு வங்கத்தில் திறக்கப்பட்ட முதல் தவெக அலுவலகம் ஆகும்.
சமூக சேவையே முதல் நோக்கம்
நிகழ்ச்சியில் மேற்கு வங்க மாநில தவெக ஒருங்கிணைப்பாளர் சைத்தாலி ராய் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.
செய்தியாளர்களைச் சந்தித்த சைத்தாலி ராய், "அரசியல் போராட்டம் அல்லது தேர்தலில் போட்டியிடுவது எங்களுடைய நோக்கம் அல்ல. சமூக சேவையே எங்களது நோக்கம்.
இதன் மூலமே சாமானிய மக்களை சென்றடைய இருக்கிறோம். இதன் வாயிலாக அமைப்பை விரிவுப்படுத்துவதுடன், சாமானிய மக்களுடன் நேரடித் தொடர்பை ஏற்டுத்திக் கொள்ள முடியும்.
விஜய் மேற்கு வங்கம் வருவார்
எதிர் காலத்தில் தேர்தலில் நிற்பது, மக்களின் வரவேற்பைப் பொருத்தும், முதலமைச்சர் விஜய்யின் முடிவைப் பொருத்தும் இருக்கும் அப்படி என்று அவர் தெரிவித்தார்.
கட்சியின் இருப்பை நிலைநாட்டுவதற்காக முதலமைச்சர் விஜய் மேற்கு வங்கம் வரலாம் என எதிர்பார்க்கின்றோம்" எனவும் கூறினார்.
இளைஞர்கள் அதிக ஆர்வம்
40 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், அனைவரது தோள்களிலும் தவெக கட்சி நிறத்திலான துண்டுகள் தொங்கின. இவர்களில் பெரும்பாலானவர் இளைஞர்களாகவும், மீதியுள்ள ஒருசிலர் நடுத்தர வயதை சேர்ந்தவர்களாகவும் இருந்தனர்.
தேசிய அளவில் தவெக
இதைத்தொடர்ந்து மற்ற வட மாநிலங்களிலும் தவெக கால்பதிக்க வாய்ப்பு உள்ளது. முதல்வர் விஜய்க்கு நாடு முழுவதும் வரவேற்பு இருப்பதால், அதை பயன்படுத்திக் கொண்டு கட்சியை பலப்படுத்த தவெக திட்டமிட்டு செயலாற்றி வருகிறது.
=============