உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல்முறை : தமிழில் வெளியான தீர்ப்பு, வழக்கின் பின்னணி!

உயர் நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற வழக்கறிஞர்கள் கோரிக்கைக்கு முன்னெடுப்பாக அமைந்துள்ளது.
For the first time in the history of the High Court - the verdict was published in 'Tamil',
For the first time in the history of the High Court - the verdict was published in 'Tamil', google
1 min read

தமிழில் வெளியான தீர்ப்பு

வரலாற்றிலேயே முதன்முறையாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக வழக்கின் தீர்ப்பு தமிழில் வெளியாகி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தமிழை அலுவல் மொழியாகும் கோரிக்கைக்கு ஒரு முன்னெடுப்பு

உயர் நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் தொடர் கோரிக்கைக்கு இது ஒரு முன்னெடுப்பாக அமைந்துள்ளது.

வழக்கின் பின்னணி

இந்த வழக்கை ,கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், "மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின் போது, வேத மந்திரங்களை சமஸ்கிருத மொழிக்கு இணையாக தமிழிலும் பயன்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்திருந்தார் .

விசாரணைக்கு வந்த வழக்கு

இந்த நிலையில் இந்த வழக்கு, கடந்த வாரம் நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது கூறிய நீதிபதி தமிழுக்கு சிறப்பு செய்யும் மதுரை என்பதால், புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் குடமுழுக்கு விழாவின்போது, தமிழுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

இது குறித்து பேசிய நீதிபதி

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின் தேதி இறுதி செய்யப்படவில்லை.

கோயில் கும்பாபிஷேகத்தில் தமிழில் ஓதுவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வரும் ஜூன் 2ஆம் தேதியன்று அறிக்கையாக அரசு தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியான தீர்ப்பு

பொதுவாக உயர்நீதிமன்ற உத்தரவு உத்தரவுகள், தீர்ப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்த நிலையில் , தற்போது மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு மட்டும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது உயர் நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற வழக்கறிஞர்களின் தொடர் கோரிக்கைக்கு இது ஒரு முன்னெடுப்பாக அமைந்துள்ளது.

தமிழில் வெளியான பிற தீர்ப்புகள்

அதேபோல, உச்ச நீதிமன்ற வரலாற்றில் 2019 ஜூலை மாதம் சரவண பவன் உணவக உரிமையாளர் ராஜகோபால் சரணடைய விலக்குக் கோரிய வழக்கின் தீர்ப்பும் இந்திய வரலாற்றில் முதல்முறையாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது.

=============

logo
Thamizh Alai
www.thamizhalai.in