
தனி தெலங்கானா - சந்திரசேகர ராவ் :
KCR Daughter Kavitha Suspended from BRS Party : ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் இருந்த போது, காங்கிரஸ் கட்சியிலும் பின்னர் தெலுங்கு தேசம் கட்சியிலும் முன்னணி தலைவராக இருந்தவர் சந்திரசேகர ராவ். அமைச்சராகவும் பொறுப்பு வகித்த இவர், தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க வலியுறுத்தி, தொடர் போராட்டங்களை முன்னெடுத்தார்.
தெலங்கானா முதல்வராக சந்திரசேகர ராவ் :
இதற்காக 2001ல் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியை துவங்கிய அவர், தெலுங்கானா தனி மாநிலம் உருவானதும் நடைபெற்ற தேர்தலில் ஆட்சியை பிடித்தார். 2014ல் முதல்வராக பதவியேற்று, 2023 வரை பதவியில் நீடித்தார். தேசிய அரசியல் ஆசை காரணமாக கட்சியின் பெயரை பாரத் ராஷ்ட்ர சமிதி என மாற்றினார்.
ஆட்சி போனதும் கட்சியில் மோதல் :
ஆட்சி பறிபோனதும் கட்சியில் பூசல்கள் வெடிக்க ஆரம்பித்தன. சந்திரசேகர ராவ் - அவரது மகள் கவிதா இடையே மோதல் வெடித்தது. சகோதரர் ராமாராவுடனும் மல்லுக் கட்டினார் கவிதா. கட்சி நிர்வாகிகளை வெளிப்படையாக கவிதா விமர்சிக்க ஆரம்பித்தது, மோதலை உச்சக் கட்டத்திற்கு கொண்டு சென்றது.
கட்சி தலைவர்கள் மீது குற்றச்சாட்டு :
தனது கட்சி தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டதால் ஆட்சியை பறிகொடுக்க வேண்டி இருந்ததாக விமர்சனங்களை முன்வைத்த கவிதா, தனது தந்தை சந்திரசேகர ராவுக்கு எதிராக நடக்கும் விசாரணைக்கு கட்சி தலைவர் ஹரிஸ் ராவ் தான் காரணம் என்றார்.
கட்சியில் இருந்து கவிதா சஸ்பெண்ட் :
இதனால், பிஆர்எஸ் கட்சியில் 2ம் கட்ட தலைவர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்தநிலையில், கவிதாவை பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும் கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்ட முறைகேடு தொடர்பாக சிபியை விசாரணைக்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி பரிந்துரை செய்துள்ள நிலையில், கவிதா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் கவிதா ஈடுபட்டதாக சந்திரசேகர ராவ் குற்றம்சாட்டி இருக்கிறார்.
மேலும் படிக்க : ”32 ஆண்டு உழைப்பு, துரோகமே பரிசு” : வைகோ மீது மல்லை சத்யா தாக்கு
கவிதா ஆவேசம் :
இந்த நடவடிக்கை பற்றி கருத்து தெரிவித்த கவிதா(BRS Kavitha), “ எனது தந்தை மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு கட்சி தலைவர்களே காரணம், என்னை காங்கிரஸ் கட்சியோ, பாஜகவோ இயக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
===============