
முன்னாள் பிரதமரின் பேரன் :
Prajwal Revanna Case Update : முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் கர்நாடகாவின் ஹசன் தொகுதியின் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக மூன்று பாலியல் வன்கொடுமை வழக்குகள், ஒரு பாலியல் துன்புறுத்தல் வழக்கு என 4 வழக்குகள் உள்ளன. பெங்களூருவில் உள்ள எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகளுக்கான சிறப்பு அமர்வு நீதிமன்றம் ரேவண்ணாவின் வழக்குகளை விசாரித்து வருகிறது.
பாலியல் வன்கொடுமை வழக்கு :
ரேவண்ணாவின் குடும்பத்துக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் உதவியாளராக இருந்த 48 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு விசாரணை மே 2ம் தேதி தொடங்கியது. நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் வழக்கை விசாரித்து வந்தார். மூத்த வழக்கறிஞர்கள் அசோக் நாயக் மற்றும் பி.என். ஜெகதீஷா ஆகியோர் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர்களாக வாதிட்டனர்.
பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி :
விசாரணை தினசரி நடைபெற்று, இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்து, நேற்று நடைபெற்ற விசாரணையின் போது பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை குற்றவாளி என நீதிபதி சந்தோஷ் கஜனன் பட் தீர்ப்பு அளித்தார். தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு :
அதன்படி இன்று பிற்பகல் பிரஜ்வல் ரேவண்ணாவிற்கு எதிரான தண்டனை விவரம்(Prajwal Revanna Case) அறிவிக்கப்பட்டது. தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதியிடம் பிரஜ்வல் கேட்டுக் கொண்டார். ஆனால், அவருக்கு ஆயுள் தண்டனை அதாவது வாழ்நாள் முழுவதும் சிறைத் தண்டனை விதித்து நீதிபதிஅதிரடி தீர்ப்பினை வழங்கினார். மேலும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : பணமோசடி வழக்கில் நோட்டீஸ் : ராபர்ட் வதேராவுக்கு சிக்கல்
கர்நாடக அரசியலில் பரபரப்பு :
முன்னாள் பிரதமரின் பேரன், கர்நாடக முன்னாள் அமைச்சர் மகனான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்நாள் சிறைத்தண்டனை கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
=======