பள்ளி முதல் முதுநிலை படிப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் : கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் அறிவிப்பு!

கர்நாடக புதிய முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்றதைத் தொடர்ந்து புதிய அமைச்சரவையின் முதல் முடிவாக மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
Karnataka Chief Minister D.K. Shivakumar Announces!
Free Bus Passes for All Students—From School to Postgraduate Levelssource: google
1 min read

கர்நாடக அமைச்சரவை 2026

கர்நாடக முதலமைச்சராக இருந்த சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் துணை முதலமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த டி.கே. சிவக்குமார் புதிய முதலமைச்சராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் மாளிகையில் பிரம்மாண்ட பதவியேற்பு விழா

இதையடுத்து அம்மாநிலத்தின் 25 ஆவது முதலமைச்சராக டி.கே. சிவக்குமார் நேற்று (ஜூன். 3) பெங்களூருவில் உள்ள மக்கள் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அம்மாநில ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த கையோடு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

13 அமைச்சர்கள் பதவியேற்பு

இந்த விழாவில், காங்கிரஸின் மூத்த தலைவரான பரமேஷ்வரா துணை முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 13 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.

துனை முதல்வராக மல்லிகார்ஜுன கார்கே மகன்

இதில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்த்ரா மற்றும் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் மகன் பிரியங்க் கார்கே ஆகியோரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்

பதவியேற்பு விழா முடிந்தவுடன், முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தலைமையில் புதிய அமைச்சரவையின் முதலாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் டி.கே. சிவக்குமார் மாணவர்களுக்கான இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

பெண்களுக்கு மட்டும் இலவசப் பேருந்து ஏன்?

அவர் பேசுகையில், “இது இளைஞர்களுக்கான காலம். பெண்களுக்கு மட்டுமே ஏன் இலவசப் பேருந்து வசதி வழங்கப்படுகிறது என்று மாணவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்

மாணவர்களின் நியாயமான இந்த கோரிக்கையை ஏற்று, பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் திட்டத்தை அமல்படுத்துகிறோம் என்றார்.

அமைச்சரவையின் முதல் முடிவு

டி.கே. சிவக்குமார் தலைமையிலான புதிய அமைச்சரவை எடுத்துள்ள முதல் முடிவு இதுவாகும். இத்திட்டத்தைப் பெற மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

போக்குவரத்து துறையுடன் விரிவான ஆலோசனை

இதுகுறித்து போக்குவரத்து துறையுடன் விரிவாக கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

========

logo
Thamizh Alai
www.thamizhalai.in