

மகளிர் இலவச பேருந்து திட்டம்
முதன்முதலில் டெல்லியில் மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை கெஜ்ரிவால் அரசு கொண்டு வந்தது. அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதை பின்பற்றி இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டங்கள் பல்வேறு பெயர்களில் பயன்பாட்டில் இருக்கின்றன.
வாக்குறுதியை நிறைவேற்றிய பாஜக
மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் ஆட்சிக்கு வந்தால், மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்து இருந்தது.
அதன்படி அங்கு பாஜக அமோக வெற்றி பெற்று, சுவேந்து அதிகாரி முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து, வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பெண்களுக்கான மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பேருந்துகளில் மகளிருக்கு இலவசம்
மாநில அரசு பேருந்துகளில் குறுகிய தூர உள்ளூர் பயணங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் நீண்ட தூர பயணங்கள் என இரண்டிலுமே பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம். ஆனால், ஏசி பேருந்துகளில் இந்த சலுகை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு ஸ்மார்ட் கார்டு
பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்க பெண்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. இந்த கார்டை பெற அவரவர் தங்களது பகுதிகளில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் அல்லது கோட்டாட்சியர்
ஸ்மார்ட் கார்டு பெறுவதற்கு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஆயுஷ்மான் பாரத் சுகாதார அட்டை ஆகியவற்றில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
பெண்கள் வரவேற்பு
விண்ணப்பிக்கும் பெண்ணின் புகைப்படம் மற்றும் பெயர் அடங்கிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இந்த கார்டை பயன்படுத்தி பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம். இந்தத் திட்டம், தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மகளிர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திட்டம் அமலுக்கு வந்து விட்டதால், ஸ்மார்ட் கார்டு பெறும் வரை ஆதார் உள்ளிட்ட ஏதாவது ஒரு ஆவணத்தை ஆதாரமாகக் காட்டினால் இலவசமாக பயணிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
=======================