பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம்
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டமானது ,வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் கீழ் எரிவாயு சிலிண்டர் மானிய விலையில வழங்கப்பட்டு வருகிறது .
இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது
மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கை குறைப்பு
உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு மானியத்தில் மத்திய அரசு பெரிய மாற்றம் செய்துள்ளது. அதனடிப்படையில் ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்பட்ட நிலையில், தற்போது அது 4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
போர் சூழல் தட்டுப்பாடு காரணம் : மானியம் குறைப்பு
தற்போது தொடர்ந்து நீடித்து வரும் போர்ச்சூழல் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர் எண்ணிக்கையை 4 ஆக தற்போது மத்திய அரசு குறைத்துள்ளது
இது குறித்து பெட்ரோலிய கூடுதல் செயலாளர் கூறியதாவது
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பிரவீன் மால் கனூஜா, மாற்றியமைக்கப்பட்ட இந்த ஒதுக்கீடானது, உஜ்வாலா திட்டப் பயனாளிகளின் சராசரி ஆண்டு நுகர்வுடன் ஒத்துப் போவதாக தெரிவித்திருந்தார்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துவருவதால் அரசுக்குச் சொந்தமான பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்களும் விலையேற்றத்தை சந்தித்து வருகின்றன ,
இதன் காரணமாக, கடந்த 3 மாதங்களில் இரண்டாவது முறையாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த வாரம் அறிவித்திருந்தது .
அதிகரித்த சிலிண்டரின் விலையின் எண்ணிக்கை
இதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சென்னையில் ரூ. 928.5-இல் இருந்து ரூ. 957.5-ஆகவும், தில்லியில் ரூ. 913-இல் இருந்து ரூ. 942-ஆகவும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
==================