
விநாயகர் சதுர்த்தி விழா :
Vinayagar Chaturthi 2025 Ganapati Special Trains : விநாயகப் பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி வரும் 27ம் தேதி வருகிறது. ஆண்டு தோறும் ஆவணி மாதம் வரும் சதுர்த்தி அன்று இந்த விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். வீடுகள் மட்டுமின்றி பொது இடங்களில் பிரமாண்டமாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். விநாயகர் சிலைகள் கரைப்பும் பெரிய விழா போலவே கொண்டாடப்படும். மும்பை, ஐதராபாத்தில் நடைபெறும் இந்த ஊர்வலம் உலக அளவில் கவனம் ஈர்த்து சுற்றுலா பயணிகளை கவரும்.
‘கணபதி’ சிறப்பு ரயில்கள் :
விநாயகர் சதுர்த்தியை(Vinayagar Chathurthi) பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடும் வகையில், ’கணபதி’ சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆகஸ்டு 11 முதல் செப்டம்பர் 6 வரை 380 கணபதி சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் பயணிகளின் பண்டிகை பயணத்தை சீராகவும் வசதியாகவும் மாற்றும் வகையில் இயக்கப்படும். மகாராஷ்டிரா மற்றும் கொங்கன் பிராந்தியங்களில் வரும் 27ம் தேதி முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை கணபதி விழா(Ganesha Chathurthi 2025 Date) கொண்டாடப்படுவதை ஒட்டி, 296 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டிலும் சிறப்பு ரயில்கள் :
இந்த சிறப்பு ரயில்கள், குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விழாவை கொண்டாட பயணிக்கும் பக்தர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த ரயில்களின் புறப்பாடு உள்ளிட்ட முழு அட்டவணையை IRCTC இணையதளம், Rail One செயலி மற்றும் கணினிமயமாக்கப்பட்ட PRS மையங்களில் மூலம் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
===========