
முழுமுதற் கடவுள் :
Vinayagar Chaturthi 2025 Date And Time in Tamil : இந்து மக்களால் முழு முதற்கடவுளாக போற்றி வணங்கப்படுபவர் விநாயகப் பெருமான். அவர் அவதரித்த ஆவணி சதுர்த்தி நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நன்னாளில் விநாயக சதுர்த்தி கொண்டாடப்படும். அதன்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி (புதன்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது
விநாயகர் சதுர்த்தி விழா :
விநாயகர் சதுர்த்தி என்றாலே விநாயகர் சிலைகள் வீதி உலா வருவதும்(Vinayagar Chaturthi 2025 Urvalam), பக்தர்கள் பரவசத்தில் திளைப்பதும் என கோலாகலங்களுக்கு பஞ்சமே இருக்காது. வீடுகளில் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி வந்து வைத்து கொண்டாட நல்ல நேரம் எது என்பதை பார்ப்போம்.
26ம் தேதி சதுர்த்தி திதி வருகிறது :
26ம் தேதி மாலை சந்திர உதய நேரத்தில் சதுர்த்தி திதி(Ganesh Chaturthi 2025 Tithi) வருகிறது. ஆகஸ்ட் 27ம் தேதி மாலை 4 மணிக்கு முன்பாகவே சதுர்த்தி திதி நிறைவடைந்து விடுகிறது. எனவே, 26ம் தேதி கொண்டாடுவதா, அல்லது 27ம் தேதி கொண்டாடுவதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
வளர்பிறை சதுர்த்தி வழிபாட்டிற்கான சதுர்த்தி திதி ஆகஸ்ட் 27ம் தேதி சூரிய உதயத்தில் தான் வருகிறது. எனவே அன்றைய தினமே(Vinayagar Chaturthi 2025 Celebration Day) கொண்டாட வேண்டும்.
சாமி கும்பிட நல்ல நேரம் :
விநாயகர் சதுர்த்தி 2025 : அன்றைய தினம் காலையில் நல்ல நேரம் 9.15 மணி முதல் 10.15 மணி வரை உள்ளது(Vinayagar Chaturthi 2025 Auspicious Time). மதியம் 1.45 மணி முதல் 2.45 மணி வரை வருகிறது. கெளரி நல்ல நேரம் காலை 10.45 மணி முதல் மதியம் 11.45 மணி வரை வருகிறது. ராகு காலம் 12 மணி முதல் 1.30 மணி வரை வருகிறது. எம கண்டம் காலை7.30 மணி முதல் 9.00 மணி வரை.
எனவே காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள்ளாகவோ அல்லது10.45 முதல் 11.45 மணிக்குள்ளாகவோ சாமி கும்பிடுவது சிறப்பு. பொதுவாக எமகண்டம் இல்லாத நேரத்தில் சாமி தரிசனம் செய்து கொள்வது மிகவும் உகந்தது.
விநாயகர் வழிபாடு :
வீட்டில் விநாயகர் சிலை அல்லது படத்தை சுத்தம் செய்து மாலை அணிவித்து வாழை இலையில் விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, பழங்கள், சுண்டலை படையலிட்டு வணங்க வேண்டும். அவருக்கு பிடித்த பாடல்களை பாடி மகிழ்விக்க வேண்டும். இதைத்தொடர்ந்து நாள்தோறும் காலை மாலை வேளைகளில் விநாயகருக்கு பிடித்தமான பண்டங்களை வைத்து அவரை வழிபட வேண்டும்.
மேலும் படிக்க : ’விநாயகர் சதுர்த்தி விழா 2025’ : கணபதி சிறப்பு ரயில்கள் இயக்கம்
மூன்றாவது நாள் வெள்ளிக்கிழமை வருவதால், சிலைகளை வீட்டில் இருந்து கொண்டு சென்று கரைக்க மாட்டார்கள். எனவே, 5ம் நாளான ஞாயிற்றுக்கிழமை விநாயகருக்கு சிறப்பு வழிபாடு செய்து, மகிழ்ச்சியுடன் கொண்டு சென்று அவரை நீர் நிலைகளில் கழித்து சதுர்த்தி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.
======