95,000ஐ நெருங்கியது தங்கம் : வெள்ளி கிலோ ரூ. 2 லட்சத்தை தாண்டியது

தங்கம், வெள்ளி விலை இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டு, புதிய சாதனை படைத்து இருக்கிறது.
Gold and silver prices reached new records, reaching all-time highs
Gold and silver prices reached new records, reaching all-time highs
1 min read

தங்கத்தை குவிக்கும் நாடுகள்

Gold hits record high, silver follows suit பல்வேறு நாடுகள், சர்வதேச முதலீட்டாளர்கள் அதிகளவில் தங்கம் வாங்கி குவித்து வருகின்றனர். அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பிற்கு பிறகு, தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிப்பு

கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம், கிராம் 11,500 ரூபாய்க்கும், சவரன் 92,000 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 190 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து, 11,525 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 92,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 195 ரூபாய்க்கு விற்பனையானது.

தினமும் இருமுறை விலை அதிகரிப்பு

நேற்று மாலை மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு 55 ரூபாய் அதிகரித்து, 11,580 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து, 92,640 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 2 ரூபாய் உயர்ந்து, 197 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

95,000ஐ நெருங்கியது தங்கம்

இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1960 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.245 அதிகரித்து ஒரு கிராம் ரூ.94,600க்கு விற்பனை ஆகிறது.

ஒரே நாளில் ரூ.1960, ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை நெருங்கியது. தங்கம் விலை வரலாறு காணாத உயர்வை சந்தித்து வருவதால், சாமான்ய, நடுத்தர மக்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

வெள்ளி விலையும் புதிய உச்சம்

தங்கத்திற்கு போட்டி போட்டு கொண்டு வெள்ளி விலையும் சரமாரியாக உயர்ந்து வருகிறது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ஒரு கிராம் ரூ.206க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை 200 ரூபாயை தாண்டி புதிய உச்சம் தொட்டுள்ளது.

ஒரு கிலோ ரூ.2 லட்சத்தை தாண்டியது

ஒரு கிலோ வெள்ளி வரலாற்றில் முதன்முறையாக 2 லட்சத்தை தாண்டி பெரும் அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.

===========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in