ஆந்திரா : தங்க சுரங்கத் திட்டம் : ஆண்டுக்கு 1,000 கிலோ தங்கம் : நாட்டுக்கு அர்ப்பணிக்கும் முதல்வர் சந்திரபாபு நாயுடு

நாட்​டின் முதல் மிகப் பெரிய தனி​யார் தங்​கச் சுரங்​கம் திட்​டத்​தில் ஆண்டுக்கு 1,000 கிலோ தங்​கம் உற்பத்தி செய்​யப்​பட உள்ளது.
Gold mining project in Andhra Pradesh; Chandrababu Naidu is the first to dedicate it to the country
Gold mining project in Andhra Pradesh; Chandrababu Naidu is the first to dedicate it to the country google
1 min read

தங்க சுரங்க திட்டம்

ஆந்திராவின் கர்​னூல் மாவட்​டம் ஜோனாகிரி தங்கச் சுரங்க திட்​டம் அடுத்த மாதம் செயல்​பாட்​டுக்கு வரு​கிறது. நாட்​டின் முதல் மிகப் பெரிய தனி​யார் தங்​கச் சுரங்​கம் திட்​டத்​தில் ஆண்டுக்கு 1,000 கிலோ தங்​கம் உற்பத்தி செய்​யப்​பட உள்ளது.

மூடப்பட்ட கோலார் தங்க சுரங்கம்

இந்​தியா தற்​போது ஆண்​டுக்கு 800 டன்​னுக்கு மேல் தங்கத்தை இறக்​குமதி செய்து வரு​கிறது. கர்​நாட​கா​வின் கோலார் தங்​கச் சுரங்​கம் கடந்த 2000-ம் ஆண்டு மூடப்​பட்ட நிலை​யில்

தற்​போது கர்​நாட​கா​வின் ராய்ச்​சூர் மாவட்டத்தில் உள்ள ஹட்டி தங்​கச் சுரங்​கத்​தில் மட்​டும் ஆண்​டுக்கு 1.5 டன் தங்​கம் உற்பத்தியானது செய்யப்பட்டு வருகிறது.

598 ஹெக்​டேர் பரப்​பில் புதிய தங்க வயல்

இந்தநிலையில் ஆந்​தி​ரா​வின் கர்​னூல் மாவட்​டத்​தில் ஜோனாகிரி, எர்​ராகுடி மற்​றும் பகி​தி​ராயி கிராமங்​களில் 598 ஹெக்​டேர் பரப்​பில் புதிய தங்க வயல் கண்டறியப்பட்டுள்ளது .

இங்கு 13.1 டன் முதல் 42.5 டன் அளவுக்கு தங்​கம் எடுக்​கலாம் என தற்போதைய ஆய்​வு​கள் தெரிவிக்கின்​றன.

ஜியோமிசோர் சர்​வீஸஸ் இந்​தியா

இங்கு ஜியோமிசோர் சர்​வீஸஸ் இந்​தியா என்ற தனி​யார் நிறு​வனம் ரூ.400 கோடிக்கு மேல் முதலீடு செய்து தங்​கச் சுரங்​கம் அமைத்து வரு​வைத்து குறிப்பிடத்தக்கது.

நாட்டுக்கு அர்ப்பணிக்கும் சந்திரபாபு நாயுடு

மேலும் இந்த ,தங்​கச் சுரங்​கத்​தில் அடுத்த மாதம் உற்​பத்தி தொடங்​க​ இருக்கும் நிலையில் இதை ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நாட்​டுக்கு அர்ப்​பணிக்​கிறார்.

இங்கு ஆண்​டுக்கு 1000 கிலோ தங்​கம் உற்​பத்தி செய்​யப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இதன் மூலம் இந்​தி​யா​வின் தங்​கம் இறக்​குமதி வெகுவாக கூறிய வாய்ப்பு இருக்கிறது.

இந்த திட்டம் குறித்து முதலீடு நிறுவனம் கூறுவது

மேலும் இத்திட்டத்தின் எதிர்கால வெற்றி பற்றி கூறும் முதலீடு நிறுவனம், ஜோனாகிரி தங்​கச் சுரங்​கத் திட்​டம் வெற்றி பெற்​றால், இன்​னும் பல முதலீட்​டாளர்​கள் தங்​கச் சுரங்​க திட்​டத்​தில் முதலீடு செய்​வர்,

அடுத்த 10 ஆண்​டு​களில் 50 முதல் 100 டன் தங்​கம் உற்​பத்தி செய்ய இந்​தியா திட்​ட​மிட வேண்​டும் என நிறுவனத்தின் இயக்குனர் தெரிவித்தார்.

============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in