பிஐஎஸ் தலைக்கவசங்கள் : வாகன ஓட்டிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

பிஐஎஸ் தரச்சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, நுகர்வோருக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
Goverment Advice Consumers to use BIS Helmets
Goverment Advice Consumers to use BIS Helmets
1 min read

இதுபற்றி மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”இந்திய சாலைகளில் 21 கோடிக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன,

தரமான தலைக்கவசம் அவசியம் :

எனவே, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. மோட்டார் வாகனச் சட்டம்-1988-ன் கீழ் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். அந்த தலைக் கவசங்களின் செயல்திறனை அறிய மதிப்பீடும் உள்ளது.

பிஐஎஸ் தரச்சான்று தலைக்கவசம் :

தரமற்ற தலைக்கவசங்கள் பாதுகாப்பு அம்சங்களை விட்டுக் கொடுத்து விடுவதால் சாலைப் பாதுகாப்பு நோக்கத்தையே அது சிதைத்து விடுகிறது. இந்தக் குறையை களையவே, 2021-ம் ஆண்டு முதல் தரக் கட்டுப்பாட்டு உத்தரவு அமலில் உள்ளது.

எனவே, இரு சக்கர வாகன ஓட்டிகள் பிஐஎஸ் தரநிலைகளின் கீழ் (ஐஎஸ் 4151:2015) சான்றளிக்கப்பட்ட, ஐஎஸ்ஐ முத்திரையிடப்பட்ட தலைக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாத நிலவரப்படி, இந்தியா முழுவதும் 176 உற்பத்தியாளர்கள் தலைக்கவசங்களுக்கான பிஐஎஸ் உரிமங்களை வைத்திருக்கின்றனர். சாலையோரங்களில் விற்கப்படும் பல தலைக்கவசங்களுக்கு பிஐஎஸ் சான்றிதழ் இல்லை.

தரமற்ற ஹெல்மெட் - நுகர்வோருக்கு அபாயம் :

இவை தரமற்றதாக இருக்க கூடும் என்பதால் நுகர்வோருக்கு சாலை விபத்துகள் ஏற்பட்டால் நுகர்வோருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாமல் போகும். எனவே, இந்தப் பிரச்சினையைச் சமாளிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

தரமற்ற தலைக்கவசங்களை சந்தையில் இருந்து அகற்றுவதன் மூலம், சாலை விபத்தால் ஏற்படும் இறப்புகளைத் தடுப்பதையும், உயர்தர பாதுகாப்பு உபகரணங்களை ஊக்குவிப்பதையும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை நோக்கமாகக் கொண்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in