

Mumbai's King's Circle Vinayaka idol insured for ₹703.27 crore; adorned with 66 kg of gold and 335 kg of silver ornaments.
மும்பையில் வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, பிரம்மாண்ட விநாயகர் சிலை மற்றும் விழாவிற்காக ரூ. 703.27 கோடிக்குக் காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது.
72-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா
மகாராஷ்டிர மாநிலத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மும்பையின் கிங்ஸ் சர்க்கிள் பகுதியில் ஜிஎஸ்பி சேவா மண்டல் சார்பில் ஆண்டுதோறும் 5 நாட்கள் பிரம்மாண்ட விழா நடத்தப்பட்டு வருகிறது.
ரூ. 703.27 கோடிக்கு காப்பீடு
தற்போது 72-வது ஆண்டாக நடத்தப்படும் இந்த விழாவில், விநாயகர் சிலை மற்றும் பக்தர்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரூ. 703.27 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் ரூ. 474 கோடிக்குக் காப்பீடு எடுக்கப்பட்ட நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு காரணமாக இந்த ஆண்டு காப்பீட்டுத் தொகை கணிசமாக உயர்ந்துள்ளது.
66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளி ஆபரணங்கள்
கோடிக்கணக்கான மதிப்பிலான ஆபரணங்கள் அணிவிக்கப்படுவதால், இந்த விநாயகரை சிலர் " பணக்கார விநாயகர்" என்றும் அழைக்கின்றனர்.
பக்தர்களின் காணிக்கை
பக்தர்கள் காணிக்கையாக அளித்த 66 கிலோ தங்கம், 335 கிலோ வெள்ளி மற்றும் நவரத்தினக் கற்கள் பதித்த ஆபரணங்கள் இந்த சிலைக்கு அணிவிக்கப்படவுள்ளன.
பாதுகாப்பு வசதிகளும் அன்னதானமும்
விழாவின் போது அதிக மதிப்பிலான ஆபரணங்கள் பயன்படுத்தப்படுவதால் விநாயகர் சிலை, அதன் பாதுகாப்பு, அர்ச்சகர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான தனிநபர் விபத்துக் காப்பீடு என அனைத்தும் இதில் அடங்கும்.
5 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நாள் தோறும் 40,000 பேருக்கு அன்னதானம் வழங்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : ஆசிரியர்கள் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘Tr’ என பயன்படுத்தலாம்: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு!
=====