ஆசிரியர்கள் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘Tr’ என பயன்படுத்தலாம்: கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு!

கர்நாடகாவில் ஆசிரியர்களை கௌரவிக்க தங்களது பெயருக்கு முன்னால் 'Tr' எனப் பயன்படுத்திக் கொள்ளலாம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவிப்பு.
Teachers may use ‘Tr’ before their names: Karnataka Deputy CM D.K. Shivakumar announces!
Teachers may use ‘Tr’ before their names: Karnataka Deputy CM D.K. Shivakumar announces!source:google, ai generated
1 min read

Teachers may use ‘Tr’ before their names: Karnataka Deputy CM D.K. Shivakumar announces!

ஆசிரியர்களுக்கு முன்னாள் ‘Tr’ முன்னொட்டு

கர்நாடகாவில் பணியாற்றும் ஆசிரியர்களின் தியாக உணர்வையும் விலைமதிப்பற்ற சேவையையும் கௌரவிக்கும் வகையில், அவர்கள் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘Tr’ என்ற முன்னொட்டைப் பெருமையுடன் பயன்படுத்திக் கொள்ளலாம் என கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் அறிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தில் சிறப்பு அறிவிப்பு

கர்நாடக மாநிலம், பாகல்கோட்டையில் நடைபெற்ற வறட்சி நிலவரம் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் டி.கே.சிவகுமார், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

ஆசிரியர்களுக்கு புகழாரம்

நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி ஆசிரியர்கள் உள்ள நிலையில், கர்நாடகாவில் மட்டும் சுமார் 4.5 லட்சம் ஆசிரியர்கள் நாட்டின் எதிர்கால தலைமுறையை உருவாக்கும் பணியில் தியாக மனப்பான்மையுடன் செயலாற்றி வருவதாக அவர் புகழாரம் சூட்டினார்.

சமுதாய கட்டமைப்பில் ஆசிரியர்களின் முக்கியத்துவம்

நம்முடைய உயிரைக் காப்பாற்றும் மருத்துவர், வாழும் கட்டிடத்தைக் கட்டும் பொறியாளர், உணவளிக்கும் விவசாயி, சேவை செய்யும் அதிகாரி, புதுமையை உருவாக்கும் தொழில்முனைவோர் மற்றும் வழிகாட்டும் தலைவர்கள் என அனைவரையும் உருவாக்குவதில் ஆசிரியர்களுக்கு முதன்மையான பங்கு உண்டு.

மாணவர்களின் தனித்திறனைக் கண்டறிந்து, அவர்களை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்கும் விலைமதிப்பற்ற பணியை ஆசிரியர்கள் செய்து வருகிறார்கள்.

'Tr' முன்னொட்டின் சிறப்பு

மருத்துவர்கள் ‘Dr’, பொறியாளர்கள் ‘Er’, பேராசிரியர்கள் ‘Prof’ எனத் தங்களது பெயர்களுக்கு முன்னால் தொழில்முறைப் பட்டங்களை முன்னொட்டாகப் பயன்படுத்துவதைப் போல, ஆசிரியர்களும் இனி ‘Tr’ என்ற முன்னொட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சேவைக்கு கிடைக்கும் அடையாளம்

இந்த இரண்டு எழுத்துக்களும் ஆசிரியர்களின் வாழ்நாள் சேவைக்கு கிடைக்கும் மிகச் சிறந்த அடையாளமாக இருக்கும் என்றும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in