

நாடளுமன்றத்தில் கூறியது
RAC New Rules 2026 in Indian Railway Check in Tamil : ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் எனப்படும் RAC பயணிகளிடம் உறுதிப்படுத்தப்பட்ட படுக்கை வசதியை வழங்காமல் முழு கட்டணத்தையும் வசூலிக்க கூடாது என நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது.
நாடாளுமன்ற குழு பரிந்துரை
பயணிகள் பட்டியலை தயார் செய்தபின், முழுக் கட்டணத்தில் ஒரு பகுதியை RAC பயணிகளுக்கு திருப்பி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னரே வலியுறுத்தப்பட்டுவந்த நிலையில் மீண்டும் அதனை உறுதிசெய்துள்ளது.
சராசரியாக 55 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் ரயில்களை அதிவிரைவு ரயில்களாக வரையறுக்கும் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு கேட்டுக் கொண்டுள்ளது.
ரயில்வே தரப்பு விளக்கம்
நாட்டில் 478 அதிவிரைவு ரயில்களில் 123 ரயில்கள் நிர்ணயிக்கப்பட்ட 55 கிலோ மீட்டர் வேகத்துக்கும் குறைவாக இயக்கப்படுவதாகவும், 47 ரயில்கள் 55 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் இயக்கப்படுவதாகவும் ரயில்வே தரப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எது அதிவிரைவு ரயிலாக கருதப்படும்
55 கிலோ மீட்டருக்கு குறைவாக இயக்கப்படும் ரயில்களை அதிவிரைவு ரயில்களாக வரையறுக்கக் கூடாது என்றும் அதிவிரைவு ரயில்களுக்கான சராசரி வேகத்தை 100 கிலோமீட்டராக அதிகரிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு வலியுறுத்தியுள்ளது.
குறித்த நேரத்தில் ரயில்கள் இயக்கம்
மேலும் கூடுதல் சேவைகளை அறிமுகப்படுத்துவதை விட, தற்போதுள்ள ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் நாடாளுமன்ற பொதுகணக்குக் குழு பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற குழுக் கேள்வி
ஆர்ஏசி டிக்கெட்டில் ஒரே பெர்த்தில் இரண்டு பயணிகள் பயணம் செய்தாலும், இருவரும் முழுத் தொகையை செலுத்த வேண்டியது அவசியம். ஆனால் ஒரே பெர்த்தில் இருவர் பயணிக்கும் போது, ஏன் இரு பயணிகளும் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும் என நாடாளுமன்ற பொது கணக்குக் குழு கேள்வியெழுப்பி உள்ளது.
பாதிக் கட்டணமே போதும்
இருவரிடமும் பாதி அளவு கட்டணங்களை வசூலிப்பதே நியாயம் என்றும் ரயில்வே துறைக்கு பொது கணக்குக் குழு அறிவுரைத்துள்ளது.
ஒரே சீட்டில் இருவர் பயணம்
RAC இருக்கை என்பது 2 பயணிகளுக்கு ஒதுக்கப்படுவதால், பகல் நேரத்தில் இருவரும் அமர்ந்து கொண்டு பயணிக்கலாம். இரவு நேரத்தில் இருவருமே தங்கள் கால்களை எதிரெதிரே நீட்டிக்கொண்டு உறங்கலாம்.
பொதுமக்கள் வரவேற்பு
RAC பயணிகளிடம் பாதி அளவு கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என நாடாளுமன்ற பொது கணக்குக் குழு பரிந்துரையை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.