தலையில் கேமரா ஒரு நாளைக்கு ரூ.250 : ரோபோக்களுக்கு சொல்லிக்கொடுக்கும் இல்லத்தரசிகள்: புதிய வேலைவாய்ப்பு, வருவாய்!

செயற்கை நுண்ணறிவு ரோபோக்களுக்கு அன்றாடப் பணிகளைக் கற்றுக்கொடுக்கும் அதிநவீன தரவு தயாரிப்புப் பணியில் இந்திய தொழிலாளர்கள்.
Head-mounted cameras at ₹250 a day, housewives training robots: New job opportunities and income!
Head-mounted cameras at ₹250 a day, housewives training robots: New job opportunities and income!source: AI generated
1 min read

Head-mounted cameras at ₹250 a day, housewives training robots: New job opportunities and income!

தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சி

உலகளவில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் நிலையில், வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் அடுத்த தலைமுறை ரோபோக்களுக்கு மனிதர்களின் அன்றாட செயல்பாடுகளை கற்றுக்கொடுக்கும் புதியதொரு வேலைவாய்ப்பு உருவெடுத்துள்ளது.

ரோபோக்களுக்கு பாடம் புகட்டும் இல்லத்தரசிகள்

இந்த அதிநவீன தரவு உருவாக்கப் பணியில் இந்திய தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

மக்கள் அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு வேலை செய்கிறார்கள், பொருட்களை எப்படி கையாளுகிறார்கள் என்பதை ரோபோக்கள் துல்லியமாக புரிந்துகொள்ள இப்பயிற்சி அவசியமானதாக உள்ளது.

பயிற்சி முறை மற்றும் தொழில்நுட்பம்

இந்த பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், இல்லத்தரசிகள் தங்கள் அன்றாட வீட்டு வேலைகளையோ அல்லது தொழிற்சாலைப் பணிகளையோ செய்யும்போது, அவற்றை முறையாக தங்களது போன் மூலம் பதிவு செய்கின்றனர்.

இதற்காக தொழிலாளர்களின் தலையில் பிரத்யேக கேமராக்கள், மோஷன் சென்சார்கள் அல்லது ஸ்மார்ட் கிளாஸ்கள் பொருத்தப்படுகின்றன.

பழங்கள் வெட்டுவது முதல் பூ கட்டுவது வரை

பழங்கள் வெட்டுவது முதல் பூக்கள் கட்டுவது வரையிலான நுணுக்கமான வேலைகள் இதில் அடங்கும். இதன்மூலம் மனிதர்களின் கண்ணோட்டத்திலேயே காட்சிகள் படம்பிடிக்கப்படுவதால், ரோபோக்களால் மனித அசைவுகளை மிகத் துல்லியமாகக் கற்றுக்கொள்ள முடிகிறது.

இந்திய தொழிலாலர்களுக்கு வருமான வாய்ப்பு

இப்பணியில் ஈடுபடும் இந்தியத் தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் 240 முதல் 250 ரூபாய் வரை ஊதியம் வழங்கப்படுகிறது.

உதாரணமாக, சென்னையைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் , தனது வீட்டு வேலைகளை இவ்வாறு பதிவு செய்து அமெரிக்கா மற்றும் இந்தியாவில் கிளைகளைக் கொண்டுள்ள முன்னணி AI தரவு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கிறாராம்.

உலகெங்கிலும் 500 கார்ப்பரேட் நிறுவனங்கள்

இந்த தரவுகளைப் பயன்படுத்தி உலகெங்கிலும் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது ரோபோக்களை வடிவமைத்து வருகின்றன.

தற்போது உலகளாவிய AI நிறுவனங்களுக்குத் தேவையான தரவுகளை உருவாக்குவதிலும், சர்வதேச தகவல் பரிமாற்றத்திலும் இந்தியா ஒரு முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in