மும்பையில் அதிகனமழை, 20 செ.மீ. பதிவு : இயல்பு வாழ்க்கை பாதிப்பு : போக்குவரத்து முடக்கம்...!

ரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்ததால், மும்பை-புனே இடையேயான ரயில் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது.
 Heavy rainfall in Mumbai (20 cm recorded); normal life disrupted; transport paralyzed.
Heavy rainfall in Mumbai (20 cm recorded); normal life disrupted; transport paralyzed.google
2 min read

மும்பையை புரட்டி போட்ட வெள்ளம், இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் இடைவிடாத கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகனமழை எதிரொலி , ரயில் சேவை முடக்கம்

அதிகனழை எதிரொலி காரணமாக மும்பையில் கர்ஜத் - லோனாவாலா மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மும்பை புனே இடையிலான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது

16 ரயில்கள் ரத்து, 9 ரயில்கள் மாற்று பாதையில் இயக்கம்

இந்திராயணி எக்ஸ்பிரஸ், டெக்கான் குயின் உள்ளிட்ட பல முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது

பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை ,அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

தொடர் கனமழை காரணமாக ,பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ரெட் அலர்ட், கல்வி நிறுவனங்களுக்கு விடுப்பு

தொடர் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்படுள்ளதால் மும்பை, புனே, தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி இந்த முடிவை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன

விரைவுச் சாலைகள் மூடல்

மும்பை-புனே விரைவுச்சாலையில் 2வது சுரங்கப்பாதை அருகே, கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக விரைவுச்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியிருப்பதால் கடும் போக்குச்வரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது

மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

மும்பையில் தொடரும் கனமழை காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கையானது முற்றிலும் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது .

=======================

கர்ஜத் - லோனாவாலா மலைப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக மும்பை புனே இடையிலான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் செல்லும் இந்திராயணி எக்ஸ்பிரஸ், டெக்கான் குயின் உள்ளிட்ட பல முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன; 9 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தியிருக்கிறார்.

அதேபோல மும்பை, புனே, தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பாதுகாப்பைக் கருதி இந்த முடிவை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் எடுத்துள்ளன. இதனையடுத்து மும்பை - புனே விரைவுச் சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக வாகனப் போக்குவரத்து மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. நகரின் பல இடங்களில் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக நிலச்சரிவு ஏற்பட்டு ரயில் தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்ததால், மும்பை-புனே இடையேயான ரயில் சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது.

logo
Thamizh Alai
www.thamizhalai.in