”விக்ரம்-1 வெற்றிப் பயணம்” : இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் : புவி சுற்றுப்பாதையை அடைந்தது, சாதித்த இஸ்ரோ...!

இந்தியாவில் தனியாரால் தயாரிக்கப்பட்ட விக்ரம்-1 என்ற ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
historic milestone achieved  successful launch of 'Vikram-1', rocket manufactured by private sector in India
historic milestone achieved successful launch of 'Vikram-1', rocket manufactured by private sector in IndiaAI generated
1 min read

இந்தியாவின் விண்வெளி பயணம்

இந்தியாவிற்கு தேவையான செயற்கைக்கோள்களை வடிவமைத்து, அவற்றை ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தும் பணியை விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

இதன்மூலம் விண்வெளி ஆய்வில் இந்தியா தொடர் சாதைனகளை படைத்து வருகிறது. வணிக ரீதியாகவும் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக செலுத்தப்பட்டு வருகிறது.

விண்வெளியில் தனியார்

இந்தநிலையில், இந்தியாவின் தனியார் விண்வெளித்துறை புதிய மைல்கல்லை எட்டத் தயாரானது. ஹைதராபாத்தைச் சேர்ந்த விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் முழுமையாக தாங்களே வடிவமைத்து உருவாக்கியது தான் இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான விக்ரம்-1.

விக்ரம்-1 ராக்கெட்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1வது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது. விக்ரம்-1

இஸ்ரோவில் இருந்து ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் சாராபாய் பெயர்

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் விக்ரம் சாராபாயின் நினைவாக இதற்கு 'விக்ரம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. விக்ரம் 1 ராக்கெட் மூலம் கிரஹா ஸ்பேஸ், காஸ்மோ சர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட்-ன் SCOPEஆகிய தொழில்நுட்ப கருவிகள் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சரிசெய்யப்பட்ட தொழில்நுட்ப கோளாறு

முன்னதாக காலை 11.30 மணிக்கு சரியாக விக்ரம் 1 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், கடைசி நேரத்தில் சிறியதொரு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராக்கெட் ஏவும் பணி சற்று நேரம் ஒத்திவைக்கப்பட்டது, இதனால் கவுன்டவுன் நிறுத்தப்பட்டது.

வெற்றிப் பயணம்

தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுப்பட்டனர். கோளாறு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் கவுன்டவுன் துவக்கப்பட்டு 12.05-க்கு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

கச்சிதமாக செலுத்தப்பட்ட விக்ரம்-1

இந்த ராக்கெட்டின் மொத்தப் பயணம் சுமார் 15.46 நிமிடங்கள் திட்டமிடப்பட்டு, கச்சிதமாக நிறைவேறியது.

சுற்றுப்பாதையை அடைந்தது

இது payloads-ஐ (செயற்கைக்கோள்களை) 450 கி.மீ சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.

இதன்மூலம் இனி இந்தியாவிலும் தனியார் ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தலாம்.

பிரதமர் மோடி பாராட்டு

வெற்றிப் பயணத்தை தொடர்ந்து, தனியார் விண்வெளி நிறுவன ஊழியர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார்.

ஸ்கைரூட் (Skyroot Aerospace) நிறுவன விஞ்ஞானிகளின் இந்தச் சாதனை இளைஞர்களைப் பெரிய அளவில் ஊக்குவிக்கும் என்றும், இந்திய விண்வெளித் துறையில் புதிய மைல்கல் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

============

logo
Thamizh Alai
www.thamizhalai.in