
independence gold stock priceபாதுகாப்பான முதலீடு தங்கம் :
Historical Gold Rate Since Independence Day 1947 : தங்கம் என்பது சங்க காலம் தொட்டே பாதுகாப்பான முதலீடாக கருதப்பட்டு வருகிறது. பொருளாதாரம் என்னவென்று தெரியாத அந்தக் காலத்தில், பண்டமாற்று முறை இருந்த போதே, மக்கள் தங்கத்தை ஆபரணங்கள் என்ற பெயரில் சேமிக்க தொடங்கினர். இதன் காரணமாகவே திருமணத்தின் போது, பெண்ணுக்கு தங்கம் போட்டு அனுப்புவது வழக்கமாக இருந்தது. பண்டைய காலங்களில் வழிபாட்டிலும் தங்கம் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு, இன்று வரை மங்களகரமாகதாக பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு வீட்டிலும் தங்கம் :
ஆண் பிள்ளைக்கு குடும்ப சொத்தும், பெண் பிள்ளைக்கு தங்க நகைகளை கொடுப்பதும் பழக்கம். ஒரு குண்டுமணி தங்கமாவது இல்லாத ஒரு வீட்டை இந்தியாவில் பார்க்க முடியாது. அந்த வகையில், இந்திய மக்களின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்து விட்டது தங்கம்.
1947ல் தங்கம் விலை ரூ.88 :
ஆங்கியேலரின் பிடியில் இருந்து 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா சுதந்திரம்(Gold Rate Since Independence Day) அடைந்தது. அன்றைய தினம் 24 கேரட் கொண்ட 10 கிராம் தங்கத்தின் விலை வெறும் 88 ரூபாய் தான். 78 ஆண்டுகளை கடந்து 2025ல் தங்கம் விலை சவரன் ( 8 கிராம் ) 80 ஆயிரத்தை எட்டி இருக்கிறது. இந்தியாவின் தங்கத்தின் விலையில் வரலாறு காணாத உச்சம் இதுதான்.
900 மடங்கு விலை அதிகரித்த தங்கம் :
அதன்படி ஆண்டு தோறும் 9 சதவீத வளர்ச்சியை பெற்று இருக்கிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால், 1947 மற்றும் 2025 ஒப்பிடும் போது 900 மடங்கு தங்கம் விலை அதிகரித்து இருக்கிறது. மும்பை பங்கு சந்தையான சென்செஸ், 1979ம் ஆண்டு 100 புள்ளிகளோடு வர்த்தகமானது. தற்போது 82 ஆயிரம் புள்ளிகள் என்ற உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது சென்செக்ஸ் ஆண்டுக்கு 16 சதவீதமாக இருக்கிறது.
பாதுகாப்பான முதலீடு தங்கம் :
இந்தியாவை பொருத்துவரை நீண்ட காலமாகவே பாதுகாப்பு, சமூக அந்தஸ்து கொடுக்கும் முதலீடாக தங்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக,10 கிராம் தங்கத்தின் விலை கணிசமான வளர்ச்சியை கண்டிருக்கிறது. 1975ல் 10 கிராம் 540 ஆக இருந்து தற்போது சுமார் ஒரு லட்சம் ரூபாயை தாண்டி விற்பனை ஆகிறது.
உலக நாடுகளின் முதலீடு தங்கம் தான் :
உலக அளவில் கலாச்சார ரீதியாக தங்கம் முக்கிய அங்கம் வகிக்கிறது பாதுகாப்பான முதலீடாக பொதுமக்கள் மட்டுமின்றி நாடுகளும் தங்கத்தையே கருதுகின்றன. சர்வதேச அளவில் பதற்றம் ஏற்படும் போது, போர் காலங்கள், பொருளாதார வளர்ச்சியில் திடீர் சரிவு போன்ற காலங்களில் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை மட்டுமே கருத முடிகிறது. சந்தைகளில் செய்யப்படும் முதலீடுகளை பொருத்தவரை, உச்சத்திற்கு கொண்டு செல்லலாம், அதள பாதாளத்திலும் தள்ளலாம்.
மேலும் படிக்க : Gold Rate Today : சவரன் ரூ.80,000, கிராம் ரூ.10,000 : புதிய உச்சம்
ஒரு லட்சத்தை நெருங்கும் தங்கம் :
தங்கத்தின் விலை சவரன் ஒரு லட்சத்தை தாண்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள். நீண்ட கால முதலீட்டில் ஆர்வம் காட்டுபவர்களுக்கு தங்கம் மட்டுமே சிறந்த வாய்ப்பு.
=====