டெல்லி கார் வெடிப்பு : அனைவரையும் வேட்டையாடுங்கள்: அமித்ஷா பதிவு!

Amit Shah Tweet on Delhi Car Blast Incident : டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களை வேட்டையாடுங்கள் என அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
Home Minister Amit Shah Tweet on Delhi Car Blast Incident
Home Minister Amit Shah Tweet on Delhi Car Blast IncidentAmit Shah X(Twitter)
1 min read

டெல்லி சம்பவம்

Amit Shah Tweet on Delhi Car Blast Incident : டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே கார் வெடித்து சிதறியதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இது குறித்து என்ஐஏ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மத்திய அரசு பல்வேறு ஆலோசனை கூட்டங்களை மேற்கொண்டு வருகி்றது அதன் ஒரு பகுதியாக டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

அமித்ஷா ஆலோசனை கூட்டம்

அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன், NIA தலைவர் சதானந்த் வசந்த், டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் சதீஷ் கோல்சா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எக்ஸ் தள பதிவு

இந்தக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் டிஜிபியும் கலந்து கொண்டார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமித் ஷா, கார் வெடிப்பு சம்பவத்தின்(Delhi Car Blast Tamil) பின்னணியில் உள்ள ஒவ்வொரு குற்றவாளியையும் வேட்டையாட உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். இந்தச் செயலில் ஈடுபட்ட அனைவரும் தங்களது விசாரணை அமைப்புகளின் முழு கோபத்தையும் எதிர்கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

இதைத்தொடர்ந்து தற்போது சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. கார் மெதுவாக இயங்கிய நிலையில் திடீரென பயங்கர வெடிப்பு நடப்பது காட்சியில் தெளிவாகத் தெரிகிறது.

இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து வெடிப்புக்கு டெட்டனேட்டர், அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டது உறுதியாகியுள்ளது.

மேலும், ஹரியானாவில் பறிமுதல் செய்யப்பட்ட 3,000 கிலோ வெடிபொருட்களுடன் தொடர்பு உள்ளதா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கார் வெடிப்பில் கைது

சம்பவத்தின் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள டாக்டர் தஜமுல் உள்ளிட்டோர் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்களா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதுவரை 7 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். என்ஐஏ குழு காஷ்மீர், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை நடத்தி வருகிறது. மேலும் சந்தேக நபர்கள் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. இந்நிலையில்,பிரதமர் மோடி தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in