திமுகவின் மோசமான நிர்வாகம் : அம்பலப்படுத்தும் தமிழக பாஜக செயல் வீரர்கள் : பிரதமர் மோடி பெருமிதம்!

திமுக ஆட்சியில் மோசமாக நிர்வாகமே நடைபெறுவதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
I am proud of the BJP workers of Tamil Nadu, says Prime Minister Modi X
I am proud of the BJP workers of Tamil Nadu, says Prime Minister Modi X google
1 min read

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தலானது வருகிற 23 ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி கட்சிகளும் தீவிர பரப்புரை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன,

பரபரப்பான அரசியல் சூழலில் , மோடி எக்ஸ் பதிவு

தமிழகத்திற்கான தேர்தலை ஒட்டி அனைத்து கட்சிகளும் அதன் கூட்டணி கட்சிகளும் தீவிர பரப்புரை மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன , இந்த நிலையில் பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது

மோடியின் எக்ஸ் பதிவு

தமிழகத்திற்கு தேர்தலானது வருகிற 23 ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் மோடி எக்ஸ் தள பதிவை வெளியிட்டுருக்கிறார்

திமுகவின் மோசமான நிர்வாகத்தை அம்பலப்படுத்தி, மாநில வளர்ச்சிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொலைநோக்குப் பார்வையை விரிவாக எடுத்துரைத்த நமது தமிழக பிஜேபி செயல்வீரர்களை எண்ணி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

13 அன்று மாலை நடைபெறும் ‘எனது வாக்குச்சாவடி, வலிமையான வாக்குச்சாவடி கலந்துரையாடல்’ நிகழ்ச்சியின் போது, கடினமாக உழைக்கும் நமது செயல்வீரர்களுடன் நான் உரையாடவிருக்கிறேன்என்று பதிவிட்டுள்ளார்

15 ல் தமிழகம் வரும் பிரதமர் மோடி

தேர்தலுக்கு இன்னு குறைவான நாளே இருக்கும் நிலையில் , பிரதமர் மோடி ஏப்ரல் 15 ல் தமிழகத்திற்கு வருகை தர இருக்கிறார்

அதன்படி கன்னியாகுமரி வரஇருக்கும் மோடி அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்ய உள்ளார்.

தொடர்ந்து, நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி எம்.ஜி.ஆர் சிலை வரை பிரதமர் மோடி பிரமாண்டமான ரோடு ஷோ மேற்கொள்கிறார்.

கூட்டணி கட்சிகளின் பங்கேற்பு

இதில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி வைத்துள்ள தொலைநோக்குச் சிந்தனைகளைத் தொண்டர்கள் மக்களிடம் கொண்டு செல்வதைப் பாராட்டியுள்ள

பிரதமர், நாளை நடைபெறும் உரையாடலை எதிர்பார்த்து இருப்பதாகவும் பதிவில் தெரிவித்துள்ளார்

==========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in