

மத்தியில் என்டிஏ ஆட்சி
Modi wave intact, 350+ seats for NDA if Lok Sabha polls held today: MOTN : 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சி அமைத்தது. இருப்பினும், இந்தத் தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை பெறத் தவறியது. அந்தக் கட்சியால் 240 இடங்களிலேயே வெற்றிபெற்றது.
என்டிஏ கூட்டணி ஆட்சி
இது பெரும்பான்மைக்கு குறைவு என்பதால், நிதிஷ் குமாரின் ஜேடியு மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது.
கருத்துக் கணிப்பு முடிவுகள்
இந்தநிலையில், இந்தியா டுடே-சி-வோட்டர் நடத்திய 'மூட் ஆஃப் தி நேஷன்' கருத்துக் கணிப்பில், இப்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்றாலும் அதில் தேசிய ஜனநாயக் கூட்டணியே வெற்றி பெறும் என்றும், அது, 352 இடங்களை வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி அலை தொடரும்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு 47% ஆக உயரும் என்றும், மோடி அலை அப்படியே தொடரும்’ என்றும் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
பாஜகவுக்கு 287 இடங்கள்
பாஜக 287 இடங்களைப் பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்’ என்று கணித்துள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2025ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பாஜகவுக்கு 260 இடங்களைக் கிடைக்கும் எனத் தெரிவித்திருந்தது.
பிரதமர் மோடி மீது அபார நம்பிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்படுத்தி இருக்கும் புவிசார் அரசியல் பதற்றங்கள், பிரதமர் மோடியின் மீது வாக்காளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க முடியவில்லை, செல்வாக்கு அப்படியே உள்ளது எனவும் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
மோடிக்கு 57% ஆதரவு
பிரதமர் மோடி, 57 சதவீத ஒப்புதல் மதிப்பீட்டையும் பெற்றுள்ளதாக MOTN கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. ஆகஸ்ட் 2025ல் அவர் பெற்ற 58% மதிப்பீடு ஆகும்.
என்டிஏ செல்வாக்கு அதிகரிப்பு
பாகிஸ்தானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை, அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வலுவான வரி மற்றும் வர்த்தக மிரட்டல்களுக்கு இந்தியா வளைந்து கொடுக்காதது, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் (EU) ஒப்பந்தங்களை மேற்கொண்டது, பிரதமர் மோடியின் செல்வாக்கை உள்நாட்டிலும் உலக அளவிலும் உயர்த்தி இருக்கிறது.
இண்டியா கூட்டணிக்கு சரிவு
அதேசமயம், இண்டியா கூட்டணிக்கு 182 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 2025 MOTN கணக்கெடுப்பு கணித்த 208 இடங்களிலிருந்து கணிசமான சரிவைக் குறிக்கிறது.
காங்கிரஸ் 80 இடங்கள் தான்
காங்கிரஸைப் பொறுத்தவரை, MOTN கணக்கெடுப்பு 80 இடங்களை வெல்லும் என்று கணித்துள்ளது. இது ஆகஸ்ட் 2025 பதிப்பில் கணிக்கப்பட்ட 97 இடங்களை விடக் குறைவானதாகும்.
செல்வாக்கை அதிகரித்து கொண்ட பாஜக
பாஜகவுக்கு எதிராக ராகுல் முன்னெடுத்த வாக்கு திருட்டு கதை பொதுமக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவில்லை.
2024 தேர்தலில் பாஜக பெரும்பான்மையைப் பெறத் தவறினாலும், அதற்குப் பிறகு வந்த ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் பீகார் போன்ற முக்கிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெற்றது.
பாஜக கூட்டணிக்கு பலம்
மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்த கருத்துக்கணிப்பு, மேலும் பலத்தைக் காட்டியுள்ளது.
=====