செல்ஃபோன்களுக்கு அதிக சத்தத்துடன் மெசேஜ்! : யாரும் பயப்பட வேண்டாம் : மத்திய அரசு விளக்கம்...

இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு, 'செல் பிராட்காஸ்ட் அலெர்ட்' என்ற எச்சரிக்கை தகவல்களை அனுப்பும் அமைப்பை உருவாக்கியுள்ளது
If you receive a loud message on your cell phone, don't panic; Central Government appeals
If you receive a loud message on your cell phone, don't panic; Central Government appeals google
1 min read

அதிக சத்தத்துடன் மெசேஜ் வந்தால் பயப்பட வேண்டாம்

இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மத்திய அரசு, 'செல் பிராட்காஸ்ட் அலெர்ட்' என்ற சோதனை குறுஞ்செய்திகள் அனுப்பும் பணி இன்று தொடங்குவதால் அவற்றை கண்டு பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பேரிடர் கால எச்சரிக்கை

இயற்கை பேரிடர் காலங்களின் போது மக்களை காக்க, பிரத்யேக எச்சரிக்கை அமைப்பை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.

பேரிடர் காலங்களில் அவசர தகவல்களை உடனுக்குடன் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்ப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது

செல் பிராட்காஸ்ட் அலெர்ட்' அமைப்பின் மூலம் நாடு முழுவதும் சோதனை

சுனாமி, நிலநடுக்கம், கனமழை போன்ற இயற்கை பேரிடர்கள் மற்றும் விஷவாயுக் கசிவு போன்ற மனிதர்களால் ஏற்படும் விபத்துகள் குறித்தும் அந்தந்த பகுதியில் வசிப்போரின், 'மொபைல் போன் எண்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்படும்.

இந்நிலையில், 'செல் பிராட்காஸ்ட் அலெர்ட்' அமைப்பை இன்று நாடு முழுதும் சோதிக்க உள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையை , மக்கள் பீதி ஆடையை வேண்டாம்

இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அடுத்து, மொபைல் போனில் உரத்த ஒலியுடன் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்

அந்த செய்தியில், 'தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செல் பிராட்காஸ்ட் எச்சரிக்கை அமைப்பின் சோதனையின் ஒரு பகுதியை தவிர.

இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை. பீதியடைய வேண்டாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசேத்' தகவல் மைபின் மூலம் இந்த எச்சரிக்கை நடவடிக்கை

மத்திய தொலைத்தொடர்பு மேம்பாட்டு மையம் உருவாக்கியுள்ள, 'சசேத்' என்ற ஒருங்கிணைந்த எச்சரிக்கை தகவல் அமைப்பு மூலம் இந்தச் செய்திகள் வினியோகிக்கப்படும் என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

===========

logo
Thamizh Alai
www.thamizhalai.in