

இந்தியாவில் அரிசி உற்பத்தி
India becomes world's largest rice producer, surpasses China: Agriculture Minister Shivraj Singh Chouhan : இந்தியாவில் அதிக அளவில் பயிரிடப்படும் பயிர்களில் ஒன்று அரிசி. பல லட்சம் ஏக்கரில் ஆண்டு தோறும் அரிசி பயிரிடப்பட்டுகிறது. தென் மாநிலங்களில் முக்கிய உணவாகவும் அரிசி இருந்து வருகிறது.
இருப்பினும் உலக அளவில் அரிசி உற்பத்தி செய்வதில் சீனா தான் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது. இந்த சாதனையை இந்தியா முறியடித்து இருக்கிறது.
சீனாவை விஞ்சிய இந்தியா
இந்தநிலையில், அரிசி உற்பத்தியில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த சீனாவை விஞ்சி, இந்தியா தற்போது உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தி நாடாக உருவெடுத்துள்ளதாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
அரிசி உற்பத்தி 150 மில்லியன் டன்
December 2025 report, the USDA said that India’s rice production has reached 152 million metric tonnes, while China’s production stands at 146 million metric tonnes டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், இந்தியாவின் அரிசி உற்பத்தி 150.18 மில்லியன் டன்களை எட்டியுள்ளதாகத் தெரிவித்தார். இது சீனாவின் உற்பத்தி அளவான 145.28 மில்லியன் டன்களை விட அதிகமாகும்.
உலகிற்கே உணவு வழங்கும் இந்தியா
"உணவுப் பற்றாக்குறை இருந்த ஒரு காலத்தில் இருந்து, இன்று உலகுக்கே உணவு வழங்கும் நாடாக இந்தியா மாறியுள்ளது. அதிக மகசூல் தரும் விதைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களே இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம்" என அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
184 புதிய பயிர் ரகங்கள்
இந்த மைல்கல் சாதனையை தொடர்ந்து, இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) உருவாக்கிய 25 பயிர்களின் 184 புதிய ரகங்களையும் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிமுகப்படுத்தினார்.
வறட்சியை தாங்கும் விதைகள்
இதில் 122 தானிய வகைகள், 24 பருத்தி ரகங்கள், 13 எண்ணெய் வித்துக்கள், 11 கால்நடை தீவனப் பயிர்கள் மற்றும் 6 பருப்பு வகைகள் அடங்கும். வறட்சி, மண் உவர்ப்பு மற்றும் பருவநிலை மாற்றங்களைத் தாங்கி வளரக்கூடிய வகையில் இந்த விதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்தப் புதிய ரகங்கள் விவசாயிகளைச் சென்றடைவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
11 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி
கடந்த 11 ஆண்டுகளில் (பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில்) 3,236 அதிக மகசூல் தரும் ரகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது 1969 முதல் 2014 வரையிலான நீண்ட காலத்துடன் (3,969 ரகங்கள்) ஒப்பிடுகையில் மிக வேகமான வளர்ச்சியாகும்.
தானிய உற்பத்தி சாதிக்கும் இந்தியா
தற்போது அரிசி உற்பத்தியில் தற்சார்பு அடைந்துள்ள நிலையில், இனி வரும் காலங்களில் பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலும் இந்தியா தன்னிறைவு பெற விஞ்ஞானிகள் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கேட்டுக் கொண்டார்.
====