India AI Summit: 100 நாடுகள், 400 நிறுவனங்கள் : சாதிக்கும் இந்தியா

India AI Impact Summit 2026 Date in Delhi : 100 நாடுகள் பங்கேற்கும் AI இம்பாக்ட் எக்ஸ்போ 2026, டெல்லியில் இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது.
India AI Impact Summit 2026 Date AI Impact Expo 2026, with participation from 100 countries, will be held in Delhi starting today
India AI Impact Summit 2026 Date AI Impact Expo 2026, with participation from 100 countries, will be held in Delhi starting todayGoogle
2 min read

செயற்கை நுண்ணறிவு

India AI Impact Summit 2026 Date in Delhi : செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் இந்தியா வரலாற்று சாதனை படைத்து வருகிறது. இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் நிறுவனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் முக்கித்துவம் வாய்ந்த நாடாக உலக அளவில் இந்தியா உருவெடுத்து உள்ளது.

டெல்லியில் ’ஏஐ’ கண்காட்சி

இதன் ஒருபகுதியாக தலைநகர் டெல்லியில் 'இந்தியா AI இம்பாக்ட் எக்ஸ்போ 2026' (India AI Impact Expo 2026) கண்காட்சி இன்று தொடங்குகிறது. உலகின் முன்னணி தொழில்நுட்ப ஜாம்பவான்கள் பங்கேற்க உள்ளனர்.

தலைசிறந்த நிறுவனங்கள் பங்கேற்பு

இந்த பிரம்மாண்ட கண்காட்சியில் என்விடியா (NVIDIA), கூகுள் (Google), ஓபன்ஏஐ (OpenAI) போன்ற உலகின் தலைசிறந்த AI நிறுவனங்கள் உட்பட 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் அரங்குகளை அமைத்துள்ளன. இந்த நிறுவனங்களின் உயர் அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டு, இந்திய நிறுவனங்களுடன் முக்கிய ஆலோசனைகளை நடத்தவுள்ளனர்.

100 நாடுகளின் பிரதிநிதிகள்

இன்று முதல் 20 வரை டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் (Pragati Maidan) இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது. சுமார் 75,000 சதுர மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

AI பயன்பாடு, அதிக வாய்ப்புகள்

இந்த எக்ஸ்போ AI சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ளவர்களுக்கு ஒரு பாலமாக அமையும். இந்திய கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் திறமையை உலகிற்கு எடுத்துரைக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை முதலீட்டாளர்களுடன் இணைக்கவும் இது பெரிதும் உதவும்.

மூன்று முக்கிய கருத்துக்கள்

இந்த உச்சிமாநாடு 'மக்கள்' (People), 'பூமி' (Planet), மற்றும் 'முன்னேற்றம்' (Progress) ஆகிய மூன்று முக்கியக் கருத்துகளை மையமாகக் கொண்டு நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, நிலையான வளர்ச்சி மற்றும் எரிசக்தி திறன் கொண்ட AI குறித்து விவாதங்கள் நடைபெற இருக்கின்றன. இதன் மூலம் சர்வதேச அளவில் இந்தியாவின் முக்கியத்துவம் உணரப்படும்.

செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம்

அலுவல் பணி மட்டும் இன்றி மருத்துவம், பாதுகாப்பு துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு முக்கியத்துவம் வாய்ந்தாக மாறி விட்டது.

20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

5 நாட்கள் இந்த மாநாடு நடைபெறும். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியா குத்ரோஸ், இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க, பிரேசில் அதிபர் லூயிஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேகிறார்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் அபுதாபி பட்டத்து இளவரசர் காலித் பின் முகமது அல்நயான் கலந்து கொள்கிறார்.

உலக நிறுவனங்களின் சிஇஓக்கள் பங்கேற்பு

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித், ஓபன் ஏஐ சி இஓ சாம் அல்ட்மேன் உள்ளிட்ட ஏஐ நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் பங்கேற்கிறார்கள்.

இன்று மாலை நடைபெறும் வண்ணமிகு விழாவில் ஏஐ உச்சி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.

==========================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in