உலகின் மிகப்பெரிய ஏஐ மையம் : மெகா திட்டத்தை அறிவித்த டிசிஎஸ்!

TCS will Launch Tata AI Sakhi in India AI Impact Summit 2026 : உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையத்தை அமைக்க டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
India AI Impact Summit 2026 : TCS launches Tata AI Sakhi to set up world's largest artificial intelligence data center.
India AI Impact Summit 2026 : TCS launches Tata AI Sakhi to set up world's largest artificial intelligence data center.Source : TCS
1 min read

ஏஐ வளர்ச்சி

TCS will Launch Tata AI Sakhi in India AI Impact Summit 2026 : இந்தியா மட்டுமல்லாது, உலகளவில் ஏஐ வளர்ச்சி மாபெரும் இடத்தை தொட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவால், இன்றைய நன்மைகைள விட, தீமைகள் அதிகம் என்கிற நிலை உள்ளது.

பலவித சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்து, காணொளி வரை இன்று இணையங்களில் வெளிவந்து, நம்மை நகைப்புற செய்வதை விட, அச்சப்பட வைக்கிறது. அதன்படி, இன்றைய ஏஐ வளர்ச்சியால், வேலையிழந்ததோரின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக உயர்ந்து வருகிறது.

இதனால், திடீர் வேலை மாற்றம், வேலையிழப்பு என அலுவலக ஊழியர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

ஆனால், இந்த ஏஐயின் அபரிவிகித வளர்ச்சியை, மாபெரும் நிறுவனங்கள் தங்கள் கையில் எடுத்து, அடுத்த தலைமுறையின் வளர்ச்சியென போட்டி போட்டு முந்தி வருகின்றனர்.

டிசிஎஸ் ஏற்பாடு

அதில் ஒன்றாக, இந்தியாவில் உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தரவு மையத்தை அமைக்க டிசிஎஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மிகப்பெரிய தரவு மையம்

டெல்லியில் நடைபெற்ற ஏஐ தாக்க உச்சி மாநாட்டில் இதுகுறித்த அறிவிப்பை டிசிஎஸ் வெளியிட்டது. வணிக நிறுவனங்கள், அரசு அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்துக்கு பெருமளவில் மாறி வருவதால் வலுவான தரவு உள்கட்டமைப்பு இப்போது மிகவும் அவசியமானதாக மாறி உள்ளது.

2030க்குள் 10 ஜிகாவாட் திறன்

தற்போது இந்தியாவின் தரவு மையத் திறன் 1.5 ஜிகா வாட்டாக உள்ளது. இது வரும் 2030-க்குள் 10 ஜிகாவாட்டுக்கும் அதிகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏஐ வேலை மற்றும் படிப்பு

கடந்த காலங்களில், ஏஐ வளர்ச்சி தொடர்ந்து சமூக வலைதளங்களை தாண்டி மாணவர்கள் மற்றும் நெட்டிசன்கள் இடையே அதிகரித்து வருகிறது.

இதனால், தாங்கள் படிக்கும் பாடத்திட்டங்களில் ஏஐ என தனி பட்டபடிப்பு இணைக்கப்பட்டு, அரசு மற்றும் பல்வேறு தனியார் கல்லூரி மட்டும் பள்ளிகளில் அது குறித்து பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால், மாணவர்களுக்க அது சார்ந்த நன்மை, தீமைகளை அறிந்து கொள்வதற்கு இந்த படிப்புகள் நல்லொதொரு வழிகாட்டியாக அமைந்திருக்கிறது.

கற்பது நலம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த ஏஐயின் வளர்ச்சி பாடம் வரை வந்துவிட்டது என்பதால், அனைவரும் சற்று கவனமாக அதை கையாண்டு, பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in