

குட்டையை குழப்பும் இண்டியா கூட்டணி
India Alliance Blaming on SIR Electoral Poll : பிகார் தேர்தலில் கிடைத்த தோல்வியை மறைக்க எஸ்ஐஆர்ஐ காரணம் சொல்லும் இண்டியா கூட்டணி, 2026 தேர்தல் தோல்விகளை
பிகார் தேர்தலில் அமோக வெற்றியை ஈட்டினாலும், தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியை எதிர்த்து தொடர்ந்து அரசியல் செய்ய வேண்டி இருக்கிறது. இந்தியா கூட்டணி வழக்கம் போல, SIR செயல்முறை மீது பழி போட்டு தனது தோல்வியை மறைக்க பார்க்கிறது. வெற்றி பெற்றால் மவுனம் காப்பது, தோல்வி அடைந்து விட்டால் தேர்தல் ஆணையத்தின் மீது துள்ளிக் குதிப்பது இண்டியா கூட்டணியின் வழக்கமாகி விட்டது. பிகாரில் இறுதி வாக்காளர் பட்டியலுக்கு எதிராக ஒரு வழக்கு கூட தாக்கல் செய்யப்பட்டவில்லை. தேர்தலில் போட்டியிட்ட எந்த வேட்பாளரும் எதிர்க்கவில்லை.
SIR மீது பழிபோட்டு தப்பிக்க முயற்சி
பிகாரில் 243 இடங்களில் NDA கூட்டணி 202 இடங்களைப் பிடித்தது.பாஜக 89 இடங்களுடன் முன்னிலை வகித்தது, அதே நேரத்தில் RJD தலைமையிலான மகாகத்பந்தன் 35 இடங்களை மட்டுமே வென்றது. காங்கிரஸ் கட்சிக்கு 6 இடங்களை மட்டுமே கிடைத்தன. தோல்வியை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக, இந்தியா கூட்டணி SIR செயல்முறை மீது பழியை சுமத்தியுள்ளது.
SIR பணிகள் - தேர்தல் ஆணையம்
உண்மையில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்பது வாக்காளர் பட்டியலை தூய்மை செய்வதற்காக, கவனத்துடன், குறிப்பிட்ட காலத்திற்குள் மேற்கோள்ளப்படும் ஒரு செயல்பாடு தான். தகுதியற்ற அல்லது இறந்த வாக்காளர்களை நீக்குவது, தகுதியான புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, துல்லியமான 100% நம்பகமான வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்காக பிழைகளை சரிசெய்வது.
ஜனநாயகத்தை நிலைநாட்டவே SIR
SIR என்பது சட்டப் பூர்வமான செயல்முறை என்பதை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். தேர்தல் ஆணையத்திற்கும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவுக்கும் அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் இது.
தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதும், நகல்களை நீக்குவதும், இறந்த நபர்கள், தகுதியற்ற உள்ளீடுகள் மற்றும் தவறான பெயர்கள் அல்லது முகவரிகள் போன்ற பிழைகளை சரிசெய்வது தான் இதன் நோக்கமாகும்.
போலி வாக்காளர்கள் நீக்கம்
பிகாரில் முதல்கட்டமாக ஜூன் 24ம் தேதி தொடங்கிய எஸ்ஐஆர் பணிகள் ஒருமாதத்தில் நிறைவடைந்தன. சுமார் 21.5 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் மற்றும் 65 லட்சம் தகுதியற்ற பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டன. இவர்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 22 லட்சம். பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தோர், நகல் வாக்காளர்கள் என 32 பேர் நீக்கப்பட்டனர். உண்மை நிலை இவ்வாறு இருக்க, வெற்று அரசியல் மூலம் ஆதாயம் தேட எதிர்க்கட்சிகள் முயற்சித்தன.
தமிழகத்தில் SIR பணிகள்
அடுத்த கட்டமாக இந்தியா முழுவதும் தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகிறது. இது எதிர்க்கட்சிகளை கலங்கடித்து இருக்கிறது. எனவே தான், கோழைத்தனமான முறையில், மக்களை குழப்பி பீதியை ஏற்படுத்த, உண்மையான வாக்காளர்களை நீக்க SIR பயன்படுத்தப்படுவதாக இண்டியா கூட்டணி குற்றம்சாட்டி வருகிறது.
வென்றால் மவுனம், தோற்றால் எதிர்ப்பு
தேர்தல் முடிவுகளுக்கு பிறகும், அவர்களால் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, மாறாக ECI போன்ற அரசியலமைப்பு நிறுவனங்களை குற்றம்சாட்டுகின்றனர். ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீரில் தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது தேர்தல் ஆணையம் மீது இண்டியா கூட்டணி குற்றம் சாட்டவில்லை. ஏன், தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 40க்கு 40 இடங்களில் வெற்றி பெற்றனர்.
காங்கிரஸ் ஆட்சியில் SIR பணிகள்
இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக SIR பணிகள் மத்தியில் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 9 முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தேர்தல் ஆணையத்தின் வழக்கமான செயல்முறை. எதிர்க்கட்சிகள் எதிர்த்தாலும் SIR செயல்முறையை நிறுத்தவோ அல்லது ரத்து செய்யவோ உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பிகாரில் இறுதி வாக்காளர் பட்டியலுக்கு எதிராக ஒரு மேல்முறையீடு கூட தாக்கல் செய்யப்படவில்லை, மேலும் 2,616 வேட்பாளர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளில் எவரும் மறுவாக்குப்பதிவு கோரவில்லை இது SIR செயல்பாடு மீதான தெளிவாக நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.
பிகார் வரலாற்றை மாற்றிய பெண்கள்
பிகார் மாநிலம் இதுவரை இல்லாத அளவுக்கு 66.91% வாக்குப்பதிவை பதிவு செய்து சாதித்தது. வாக்களிக்க பொதுமக்கள் ஆர்வமாக இருந்தனர். குறிப்பாக பெண்கள் 71.6% வாக்குப்பதிவை செய்து காட்டி இருக்கிறார்கள். 2020 ஐ விட 49,62,013 பெண்கள் கூடுதலாக வாக்களித்து உள்ளனர். இதன்மூலம், வாக்காளர்கள் யாரும் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்பது நிரூபணமாகி இருக்கிறது.
2026லும் பாடம் இருக்கு!
எனவே, காங்கிரஸ் கட்சியும், இண்டியா கூட்டணி கட்சிகளும் தேர்தல் தோல்விகளை சமாளிக்க வேறு சிறந்த வழிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
ராகுல் காந்தியின் 95 தேர்தல் தோல்விகளுக்கு பிறகும் இந்தியா கூட்டணி எந்த பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. இனி நடக்கவிருக்கும் தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல்களும் இவர்களுக்கு பாடம் புகட்டும். அதற்கான காரணம் என்ன என்பதை கண்டுபிடித்தால் மட்டுமே எதிர்க்கட்சிகளின் எதிர்காலத்திற்கு நல்லது.
=======================