
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் :
பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளை ஒன்றிணைத்து நடத்தப்படுவதே காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 1930ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்தப் போட்டிகளை காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு (CGF) நடத்தி வருகிறது.
காமன்வெல்த் பெண்களுக்கு முன்னுரிமை :
2018 முதல் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2022ம் ஆண்டு ஆண்களை விட பெண்களுக்கான போட்டிகள் அதிக அளவில் இருந்தன. இதுவரை 9 நாடுகளில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு இருக்கின்றன.
2023ல் இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகள் :
2030ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை குஜராத்தின் அகமதாபாத் நகரில் நடத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கான ஏலத்தில் பங்கேற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
காமன்வெல்த் விளையாட்டு- இந்தியாவுக்கு வருவாய் :
ஏல விண்ணப்பத்தை காமன்வெல்த் கூட்டமைப்பு ஏற்றுக் கொண்டால், அதன்பிறகு, தேவையான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும். விளையாட்டுப் போட்டிகளின் போது ஏராளமான விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், சுற்றுலாப் பயணிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இந்தியாவிற்கு வருவார்கள் என்பதால் உள்ளூர் வணிகங்கள் பயனடைந்து அதிக வருவாய் ஈட்டப்படும்.
உலகத் தரத்தில் அகமதாபாத் :
உலகத்தரம் வாய்ந்த மைதானங்கள், அதிநவீன பயிற்சி வசதிகள் ஆகியவற்றுடன் விளையாட்டு கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு சிறந்த நகரமாக அகமதாபாத் உள்ளது. உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில், 2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இந்தியாவில் சுற்றுலா மேம்படும் :
விளையாட்டுகளுக்கு அப்பால், இந்தியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது சுற்றுலாவை மேம்படுத்துவதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், லட்சக் கணக்கான இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதிலும் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.
இந்தியாவின் பெருமை கூடும் :
போட்டிகளை நடத்துவதால், அது சார்ந்த தொழில்களுக்கு ஏராளமானோர் தேவைப்படுவார்கள். எனவே, பல்லாயிரக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்பும் உருவாகும். உலக அளவில் மதிப்புமிக்க இத்தகைய நிகழ்வை நடத்துவது இந்தியாவின் பெருமைக்கு மேலும் புகழ் சேர்க்கும்.
================