அமெரிக்காவின் Blue Bird செயற்கைக்கோள் : விண்ணில் செலுத்தும் ISRO

6,500 கிலோ எடையுடன் அமெரிக்கா உருவாக்கி உள்ள புளூ பர்ட் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துகிறது இந்தியா.
India is launching 6,500 kg Blue Bird satellite, developed by United States of America
India is launching 6,500 kg Blue Bird satellite, developed by United States of America
1 min read

விண்வெளியில் சாதிக்கும் இந்தியா :

விண்வெளி ஆய்வு, செயற்கைக்கோள்களை செலுத்துவதில் இந்தியா நிபுணத்துவம் பெற்று வருகிறது. நம் நாட்டில் தயாரிக்கப்படும் செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு செயற்கைக் கோள்கையும் வணிக ரீதியில் வெற்றிகரமாக செலுத்தி வருகிறது.

அந்த வகையில் இந்தியா - அமெரிக்கா கூட்டு ஒத்துழைப்பில் உருவான நிசார் செயற்கைக்கோளை இஸ்ரோ அண்மையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

அமெரிக்காவின் Blue Bird செயற்கைக்கோள் :

இந்தநிலையில், அமெரிக்கா உருவாக்கி உள்ள 6500 கிலோ எடை கொண்ட ப்ளூ பர்ட் ’Blue Bird‘ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது. அதிநவீன 'எல்.வி.எம்.3 எம்.5' ராக்கெட் மூலம் இந்தச் செயற்கைக்கோளை ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாராகி வருகின்றனர்.

புரட்சிகரமான தொழில்நுட்பம் :

’Blue Bird‘ செயற்கைக்கோளில், புரட்சிகரமான தொழில்நுட்பம் உள்ளது. எந்தவொரு சிறப்பு கருவியும் இல்லாமல், சாதாரண மொபைல் ஃபோன்களுக்கு செயற்கைக் கோளிலிருந்தே நேரடியாக அதிவேக இணைய இணைப்பை வழங்குவதே இதன் தனிச் சிறப்பாகும்.

நேரடியாக இணைய சேவை :

’Blue Bird‘ல் உள்ள 64 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான ஆன்டெனா தொலைதூரக் கிராமங்களில் இருப்போரின் மொபைலுக்கும் நேரடியாக இணைய சேவையை வழங்கும்.

இந்தியாவுக்கு திருப்புமுனை :

அமெரிக்காவின் இவ்வளவு பெரிய, முக்கித்துவம் செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவுவது இரு நாடுகளுக்கும் இடையேயான விண்வெளி ஒத்துழைப்பைப் வலுப்படுத்தும்.

இந்தியாவின் ஆற்றலுக்கு சான்று :

இது இந்தியாவின் தொழில்நுட்ப ஆற்றலுக்கு ஒரு சான்றாக இருப்பதோடு உலக விண்வெளித் தொழில்நுட்ப சந்தையில், இந்தியாவின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும். எனவே, ’Blue Bird‘ செயற்கைக் கோளை செலுத்துவதில் இஸ்ரோ மிகுந்து முனைப்பு காட்டி வருகிறது.

============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in