கச்சா எண்ணெய் வாங்க எதிர்ப்பு
Venezuela sends mega 2-million-barrel Crude oil cargoes to India as exports surge : இந்தியாவும் மற்ற நாடுகளை போல ரஷ்யாவிடம் அதிகம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்த நாடுகளில் ஒன்றாக இருந்தது. இந்த கொள்முதலிற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் எதிர்ப்பினை தெரிவித்தார். இந்தியா மீது கூடுதல் வரிகளையும் விதித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தகம் தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது.
இந்தியா -வெனிசுலா ஒப்பந்தம்
அமெரிக்கா அதிபரின் வரிவிதிப்பு காரணமாக இந்தியா பேச்சுவார்த்தை மேற்கொண்ட பிறகு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை குறைத்துக் கொள்ள இந்தியா சம்மதம் தெரிவித்ததாக அதிபர் ட்ரம்ப் கூறினார்.
இதனை அடுத்து வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலைச் செய்ய இந்தியா ஒப்புக்கொண்டது.
ரஷ்யாவிற்கு பதிலாக ஈடுகட்ட மற்ற நாடுகளில் எண்ணெய் கொள்முதல்
அமெரிக்காவின் நெருக்கடியை அடுத்து ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ள இந்தியா, அதை ஈடுகட்ட சவூதி அரேபியா, வெனிசுலா ஆகிய நாடுகளில் இருந்து வாங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நோக்கி வரும் கச்சா எண்ணெய்
அந்த வகையில், வெனிசுலாவில் இருந்து தலா 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் 2 சரக்கு கப்பல்கலில் இந்தியா நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இந்தக் கப்பல்கள் அடுத்த மாதம் இந்தியா வந்தடையுள்ளன . எனினும், வெனிசுலா எண்ணெய் ரஷ்ய எண்ணெய்யைவிட கடினமானது என்பதால் அவற்றை சுத்திகரிக்கக் இன்னும் கூடுதல் செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.