National Security Advisor Of India Ajit Doval on Operation Sindoor
National Security Advisor Of India Ajit Doval on Operation Sindoor

’ஆபரேஷன் சிந்தூர்’ இந்தியாவுக்கு இழப்பே இல்லை : அஜித் தோவல் பதிலடி

Ajit Doval on Operation Sindoor : ஆபரேஷன் சிந்துரில் இந்தியாவுக்கு எந்த இழப்பும் இல்லை என்று, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உறுதிபடத் தெரிவித்து இருக்கிறார்.
Published on

'ஆபரேஷன் சிந்தூர்' :

National Security Advisor Ajit Doval : சென்னை ஐஐடி-யின் 62வது பட்டமளிப்பு விழாவில் அஜித் தோவல் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், 'ஆபரேஷன் சிந்தூர்'(Operation Sindoor) பற்றி குறிப்பிட்டார். பாகிஸ்தானுக்கு உள்ளே செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத இலக்குகளை தாக்கத் திட்டமிட்டோம். எல்லைப் பகுதிகளில் அல்ல. ஒரு இடத்தையும் தவறவிடாமல், திட்டமிட்ட இலக்குகளை துல்லியமாக தாக்கி அழித்தோம்.

இந்தியாவுக்கு சேதம் ஏதும் கிடையாது :

முழு நடவடிக்கையும் 23 நிமிடங்களில் முடிந்தது. இந்தியாவுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டதைக் காட்டும் ஒரு புகைப்படம் கூட இல்லை. நியூயார்க் டைம்ஸ்(The New York Times) போன்ற வெளிநாட்டு ஊடகங்கள், மே 10ம் தேதிக்கு முன்பு முன்பும், பின்பும் எடுக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானத் தளங்களின் புகைப்படங்களை காட்டின. பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்கும்(India Pakistan War) திறன் நமக்கு முழுமையாக உள்ளது. இதை உலகிற்கு நிரூபித்து காட்டி விட்டோம்.

நமது நாகரிகத்தையும், தேசத்தையும் உயிர்ப்புடன் வைத்திருக்க, நமது முன்னோர் எவ்வளவு அவமானங்கள், இழப்புகள், சிரமங்களை அனுபவித்தார்கள் என்பது பற்றி எனக்குத் தெரியாது. நாடு என்பதும், அரசு என்பதும் வேறு. இந்தியா ஒரு நாடாக பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது.

100 சதவீதம் வெற்றி பெற்றோம் :

அது ஒரு அரசாக புதியதாக இருக்கலாம். இன்னும் 22 ஆண்டுகளில் சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை நிறைவு செய்யப் போகிறோம். அப்போது நீங்கள் உங்கள் வாழ்க்கையின் உச்சத்தில் இருப்பீர்கள்,

ஆபரேஷன் சிந்தூரில்(Operation Sindoor) முழுக்க முழுக்க உள்நாட்டு ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இவற்றில் 100 சதவீதம் வெற்றி கிடைத்ததை யாரும் மறுக்க முடியாது. இதுபற்றி எதிர்மறையாக விமர்சிக்கும் எவரிடமும் அதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதே உண்மை, இவ்வாறு அஜித் தோவல் தெரிவித்தார்.

logo
Thamizh Alai
www.thamizhalai.in