

வல்லரசு - வரிசையில் இந்தியா
India Will Became Superpower Country : வல்லரசு, சூப்பர்பவர் என்ற வார்த்தைகளை பயன்படுத்தும் போது நமக்கு நினைவுக்கு வருவது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், சீனா தான். . ஆனால், இந்த வரிசையில் உலகில் மற்றொரு நாடும் உள்ளது, அது வல்லரசாக மாறுவதற்கான பயணத்தில் மிக வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அதுதான் இந்தியா, காரணம் பொருளாதார வளர்ச்சி
ஸ்திரமான பொருளாதார வளர்ச்சி
பொருளாதார வளர்ச்சி, மக்கள் தொகை மற்றும் ராணுவ விரிவாக்கம் காரணமாக இந்தியா ஏற்கனவே ஒரு சாத்தியமான வல்லரசாக கருதப்படுகிறது. 1947ல், ஆங்கிலேயரிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றபோது, உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இருந்தது. 1991ல் கூட, இந்தியாவின் பொருளாதாரம் பாரிஸ் மற்றும் லண்டன் போன்ற நகரங்களின் பொருளாதாரத்தை விட குறைவாகவே இருந்தது.
4.150 டிரில்லியன் டாலர்
ஆனால் இன்று, இந்தியாவின் பொருளாதாரம் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளின் பொருளாதாரத்தை விட மிகப் பெரியது. 2014-ல், இந்தியாவின் பொருளாதாரம் 10வது இடம். இன்று, 4.150 டிரில்லியன் டாலர் என்ற பிரம்மாண்டமான வளர்ச்சியுடன் உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா நடைபோடுகிறது.
வளர்ச்சியில் முந்தும் இந்தியா
10 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் கனடா, ரஷ்யா, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற உலகின் ஐந்து முக்கிய பொருளாதார நாடுகளை முந்தி இருக்கிறது இந்தியா. 6.5% முதல் 7% வரையிலான சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்துடன் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார நிலையை இந்தியா எட்டி இருக்கிறது.
2027க்குள் ஜப்பான் மற்றும் ஜெர்மனியை பின்னுக்கு தள்ளி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் இந்தியா அசுர வேகத்துடன் பயணித்து வருகிறது.
உலகில் அதிக மக்கள்தொகை
கடந்த ஆண்டு, இந்தியா சீனாவை முந்தி, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், உலகின் புதிய சாத்தியமான வல்லரசாகவும் மாறியது. பெரும் ஆற்றலை கொண்டஇளைஞர் சக்தி, மக்கள் தொகையில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் மக்கள் தொகையில் 50% க்கும் அதிகமானோர் 25 வயதுக்குட்பட்டவர்கள். 65% க்கும் அதிகமானோர் 35 வயதுக்குட்பட்டவர்கள்.
உள்கட்டமைப்பில் அதிக கவனம்
கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு திறன் ஒரு நாட்டின் வளர்ச்சியில் முதுகெலும்பாக திகழ்கிறது. இதை நன்கு உணர்ந்து இருக்கும் இந்தியா, உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்துகிறது. இந்தியாவின் ரியல் எஸ்டேட் சந்தை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. உலகளவில் அதிக எண்ணிக்கையில் மெகா கட்டுமான திட்டங்கள் இந்தியாவில் தான் செயல்படுத்தப்படுகின்றன.
இந்தியா தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டமான தேசிய உள்கட்டமைப்பு குழாய்வழித் திட்டத்திற்காக 1.9 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவிடுகிறது, இது தென் கொரியாவின் முழுப் பொருளாதாரத்தையும் விட அதிகம். உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவது முதல் மக்களின் சிறந்த வாழ்க்கை தரம் வரை இது அனைத்தையும் மாற்றப் போகிறது. இந்தத் தொகை 2019 மற்றும் 2025-க்கு இடையில் செலவிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
பாரத் மாலா திட்டம்
பாரத் மாலாவும் 140 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை கொண்ட மெகா திட்டம் தான். நாடு முழுவதும் உறுதியான மற்றும் நவீன சாலை வலையமைப்பை உருவாக்குவதே இதன் இலக்கு.
சாகர் மாலா திட்டம்
அதேபோல சாகர் மாலா திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 130 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும். இது இந்தியாவின் கடலோர உள்கட்டமைப்பை மாற்றி, துறைமுக இணைப்பைகளை மேம்படுத்தி, கடல்சார் வர்த்தகம் மற்றும் இணைப்பை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தொழில்துறை வழித்தடம்
டெல்லி-மும்பை தொழில்துறை வழித்தடத்தின் மதிப்பு செலவு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாகும். அரசியல் தலைநகரான டெல்லிக்கும், வணிகத் தலைநகரான மும்பைக்கும் இடையில் 1483 கி.மீ. நீளத்திற்கு பரவியுள்ள ஒரு மாபெரும் உள்கட்டமைப்பு திட்டம் இது.
ஸ்மார்ட் நகரங்கள்
100 ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்திற்கு 100 பில்லியன் டாலர்கள். நாடு முழுவதும் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கி, அவற்றை நீடித்த, நவீன மற்றும் குடிமக்களுக்கு உகந்தவையாக மாற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் தான் இது. இதேபோன்று, இந்தியா பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட்டு பல்வேறு மெகா திட்டங்களில் செயல்படுத்தி வருகிறது.
வலிமையான ராணுவம்
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்குப் பிறகு, உலகின் நான்காவது சக்திவாய்ந்த இராணுவம் இந்தியாவிடம் இருக்கிறது. ஏறக்குறைய 82 பில்லியன் டாலர் பட்ஜெட்டுடன், இந்தியா உலகில் நான்காவது பெரிய இராணுவச் செலவினம் கொண்ட நாடாக உள்ளது.14 லட்சம் ராணுவ வீரர்கள், 11 லட்சம் ரிசர்வ் வீரர்கள், 25 லட்சத்திற்கும் அதிகமான துணை ராணுவப் படையினர் இந்தியாவின் வலிமைக்கு துணை நிற்கின்றனர்.
53 லட்சம் வீரர்கள்
எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் 53 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களுடன் உலகின் மிகப்பெரிய இராணுவம் இந்தியாவிடம் இருக்கிறது. 14 லட்சம் ராணுவத்தினர் தயாராக களத்தில் நிற்க உலகின் இரண்டாவது பெரிய ராணுவமாக இந்தியா திகழ்கிறது. இந்தியா அமைதியை விரும்பினாலும், அணு ஆயுதம் கொண்ட நாடாகவும் உள்ளது.
அணு ஆயுத நாடு இந்தியா
சக்தி வாய்ந்த அணு ஆயுதங்கள் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கின்றன. இந்தியா தனது இராணுவத்தை வேகமாக விரிவுபடுத்தி நவீனமயமாக்கி வருகிறது. உலகின் மிகப்பெரிய ராணுவ ஆயுத இறக்குமதி நாடாக மட்டுமின்றி, ஆயுத உற்பத்தியாளர்களை அதிகம் கொண்ட நாடாகவும் இந்தியா திகழ்கிறது.
145 நாடுகளுக்கு ஏற்றுமதி
145க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ராணுவ உபகரணங்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. விரைவான தொழில் மயமாக்கலால் மூலம் இந்தியாவின் தளவாடச் செலவுகள் குறைந்து வருகின்றன. உலகின் பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் உற்பத்தியைத் தொடங்குகின்றன. 2021 ஆண்டே இந்தியா, அமெரிக்காவை முந்தி, சீனாவுக்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தி மையமாக மாறி விட்டது.
தொழிலாளர்கள் நிறைந்த இந்தியா
குறைந்த செலவிலான தொழிலாளர் சக்தி மற்றும் உலகின் மிகப்பெரிய சந்தை இந்தியாவிற்கு அனைத்து வழிகளிலும் வலுச் சேர்க்கிறது. எனவே தான், உலகின் பெரிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி மற்றும் வணிகத்திற்காக இந்தியாவை நோக்கி படையெடுக்கின்றன.
3வது தொழில் மையமான நாடு
900 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொழில்துறை உற்பத்தியுடன், இந்தியா ஏற்கனவே உலகின் முதல் ஐந்து தொழில் மயமான நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. 2030-ஆம் ஆண்டிற்குள் 3 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான அளவில் தொழில்துறை உற்பத்தி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. 3வது தொழில் மையமான நாடு என்ற இடத்தை நோக்கி வேகமாக முன்னேறுகிறது இந்தியா
அறிவியல், தொழில்நுட்பம் அதிக கவனம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா வலுவான கவனம் செலுத்துகிறது. இவற்றுக்கான முதலீட்டுத் தலங்களில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் மிகப்பெரிய நாடு, மென்பொருள் சேவைகளை வழங்கும் மூன்றாவது பெரிய நாடு, வன்பொருள் மற்றும் மென்பொருட்களை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிக்கு சாட்சியாக நிற்கின்றன.
90.000 ஸ்டார்அப்கள்
2014ல் இந்தியாவில் வெறும் 400 ஸ்டார்ட்அப்கள் மட்டுமே இருந்தன, ஆனால் இன்று 90,000க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் உள்ளன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மிகவும் வெற்றிகரமான முதல் ஐந்து விண்வெளி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.
விண்வெளியில் சாதனை
2024ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, இஸ்ரோ 38 வெவ்வேறு நாடுகளுக்காக 436-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும், 150க்கும் மேற்பட்ட இந்தியத் தயாரிப்பு செயற்கைக்கோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி அசத்தி இருக்கிறது.
செயற்கைக்கோள் எதிர்ப்பு ஆயுதம் எனப்படும் மேம்பட்ட தொழில்நுட்பமு நான்கு நாடுகளில் மட்டுமே உலகில் உள்ளன, அவற்றில் இந்தியாவும் ஒன்று. இந்த எதிர்ப்பு ஆயுதம் மூலம் வாண்வெளியில் உள்ள எந்த நாட்டின் செயற்கைக் கோள்களையும் அழிக்கலாம். தகவல் தொடர்பு அமைப்புகளை சிதைக்கலாம்.
பிரதமர் மோடி ஆட்சியில்
வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரம், வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பங்குச் சந்தை, வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் சூழலமைப்பு, வேகமாக வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் சந்தை என இந்தியா தன்னை எதிர்கால உலக வல்லரசாகத் தயார்படுத்தி வருகிறது. இதற்கு மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவும், தலைமை ஏற்று வழிநடத்தும் பிரதமர் நரேந்திர மோடியும் காரணம்என்பதில் சந்தேகமில்லை.
==========