

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்
India US Trade Agreement 2026 : ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த 25 சதவீத அபராத விதி உட்பட 50 சதவீத வரியை இந்தியா எதிர்கொண்டிருந்த நிலையில், தற்போது கடந்த வாரம் நடந்த இந்தியப் பிரதமர் மோடி-அமெரிக்க அதிபருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருநாடுகளுக்கும் இடையில் முக்கிய வர்த்தக ஒப்பந்தம் உறுதியானது.
வெள்ளை மாளிகை அறிக்கை
இந்தியா - அமெரிக்கா இரு நாடுகளுக்கான வர்த்த ஒப்பந்த முடிவையடுத்து, இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அறிவிப்புகளை வெள்ளை மாளிகை சுருக்க அறிக்கையாக வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இந்திய, அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது,
இந்தியா அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தமானது தற்போது தொடக்க நிலையிலேயே உள்ளது.
இந்த ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் காலபோக்கில் தெரியவரும் என்று கூறியுள்ளார்.
500 பில்லியன் டாலர்
மேலும், அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த இருதரப்பு வர்த்தக ஒப்பந்தமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதனால் இந்த ஒப்பந்தமானது மிகவும் நல்லது என்று கூறியுள்ளார்.
டிரம்ப் பேச்சு
இருதரப்பு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தையை தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பொருட்கள் மீதான வரியை குறைப்பதாக அறிவித்த நாளில் இருந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றார்.
மேலும் அதற்கு கூடுதலான அளவில் அமெரிக்காவிடமிருந்து வாங்கவும், வெனிசுலாவிடமிருந்து வாங்கவும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறினார்.
ஹர்தீப் சிங் பூரி விளக்கம்
டிரம்பின் இந்த கூற்றைத் தொடர்ந்து உள்நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, நல்ல தரத்தில் கச்சா எண்ணெய் கிடைக்கும் நாடுகளிடம் இருந்து தொடர்ந்து இந்தியா இறக்குமதி செய்யும்.
இதில் எரிசக்தியும் அடங்கும் என்று மத்திய அரசின் நிலைப்பாட்டை த்திய பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெளிவுபடுத்தியுள்ளார்.
====