”மாற்றம் பெறுகிறது இந்தியா இராணுவ வீரர்களின் உடை” : பழைய பிரிட்டிஷ் முறைக்கு விடை! காலனித்துவத்திற்கு முற்றுப்புள்ளி!

இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ கால மரபுகளை முடிவுக்கு கொண்டுவருவதற்காக வீரர்களின் சீருடைகளில் மாற்றங்களை செய்துள்ளது இந்திய இராணுவம்
Indian Army uniforms set for a change: Bidding farewell to the old British-style attire.
Indian Army uniforms set for a change: Bidding farewell to the old British-style attire. google
1 min read

பழைய ராணுவ சீருடையில் மாற்றம்

இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ கால மரபுகளை முடிவுக்கு கொண்டுவருவதற்காக வீரர்களின் சீருடைகளில் மாற்றங்களை செய்துள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது

ராணுவ சீரமைப்பில் முக்கிய மாற்றம்

இந்திய இராணுவ மரபுகளை சீரமைக்கும் நோக்கில் இந்திய இராணுவம் பல காலனித்துவ கால நடைமுறைகளை முற்றிலும் மாற்றி ஒரு புதிய சீருடை விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி ' இராணுவ சீருடைகள் 2026 ' என்ற கையேட்டில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகள் கடந்த 10 ஆண்டுகளில் இராணுவ சீருடை நெறிமுறைகளில் செய்யப்பட்ட மிகப் பெரிய திருத்தமாக இது பாரக்கப்படுகிறது

பாரம்பரிய அடையாளத்தை வுலுப்படுத்த இந்த நடவடிக்கை

ராணுவ படையில் , செயலையும் ,பாரம்பரிய அடையாளத்தை வழுப்படுத்தவும் இந்த புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது .

திருத்தப்பட்ட விதிமுறை

திருத்தப்பட்ட சீருடை விதிமுறைகள் அடங்கிய 'ராணுவ சீருடைகள் - 2026' என்ற 174 பக்க கையேட்டை இந்திய ராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது. காலனித்துவ கால நடைமுறைகள், கலைச்சொற்கள் மற்றும் அவசியமற்ற அலங்காரக் கூறுகளை நீக்கும் வகையிலான அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளது

திருத்தப்பட்ட விதியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது

புதிதாக திருத்தப்பட்ட விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

திருத்தப்பட்ட விதியின் படி ராணுவம் , கப்பல் ,விமான படை ஆகிய மூன்றிற்க்கும் ஒரே எண்ம முறையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

சீருடையில் இருக்கும்போது, விசித்திரமான முடி திருத்தல் , தாடி, வெளியில் தெரியும்படி மின்னணு சாதனங்களை வைத்திருப்பது, பச்சை குத்திக்கொள்வது மற்றும் அழகுச் சாதன ஒப்பனைகள் செய்வது ஆகியவற்றிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத வழிப்பாட்டு கூட்டம் , போராட்டங்கள், திருமணங்கள் மற்றும் பார்ட்டிகள் போன்ற இடங்களுக்கு சீருடை அணிந்து செல்வதற்கு டஹ்டை விதிக்கப்பட்டுள்ளது

அதேபோல், சீருடையில் இருக்கும்போது மீசையின் நீளம் 12 சென்டிமீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும்

வாசனை திரவியம், பொட்டு மூக்குத்தி பயன்படுத்த தடை

வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் ஷேவிங் செய்த பின் லோஷன்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பெண் அதிகாரிகளாக இருக்கும் பட்சத்தில் ,சீருடையில் இருக்கும்போது உதட்டுச்சாயம், பொட்டு மற்றும் மூக்குத்தி போன்றவற்றை பயன்படுத்துவதற்கு தடை வித்திகப்பட்டுள்ளது

மேலும் உணவக உடை எண் 5 மற்றும் 6 ல் உள்ள பவுச் பெல்ட்டை நீக்குவது, விரும்பினால் வாளை எடுத்துச் செல்லுதல், 'ராயல்' போன்ற சொற்களைப் பயன்படுத்துவதற்கு தடையானது விதிக்கப்பட்டுள்ளது.

==================

logo
Thamizh Alai
www.thamizhalai.in