

இந்தியாவில் ரயில்கள் இயக்கம்
ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மீட்டர்கேஜ் பாதையில் நிலக்கரியால் இயங்கும் ரயில்கள் இயக்கப்பட்டன.
மின்சார ரயில்கள்
இந்தியாவில் ரயில் பாதை மின்மயமாக்கல் 1925ல் தொடங்கியது. நாட்டின் முதல் மின்சார ரயில் 1,500 வோல்ட் டிசி அமைப்பில், மகாராஷ்டிராவின் மும்பை விக்டோரியா டெர்மினஸ் மற்றும் குர்லா ஹார்பர் இடையே இயக்கப்பட்டது.
இந்தியாவில் இருப்பு பாதைகள்
அதன்பிறகு படிப்படியாக மீட்டர்கேஜ் பாதைகள், பிராட்கேஜ் பாதைகளாக அதாவது அகல ரயில் பாதைகளாக மாற்றப்பட்டு, பயணிகள் ரயில்கள் தொடங்கி, வந்தே பாரத் ரயில்கள் வரை இயக்கப்பட்டு வருகின்றன. விரைவில் புல்லட் ரயிலும் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.
பிராட்கேஜ் மின்மயமாக்கல்
அகல ரயில் பாதையை பொருத்தவரை, மொத்தமுள்ள 70,271 கி.மீ. அகல ரயில் பாதையில் 2026 மே 31ம் தேதி நிலவரப்படி 70,002 கி.மீ. மின்மயமாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அகல ரயில் பாதையில் 99.6% ஏற்கெனவே மின்மயமாக்கப்பட்டு விட்டதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
100% மின்மயமாக்கல்
25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் அகல ரயில்பாதையில் 100% மின்மயமாக்கலை எட்டியுள்ளன.
ராஜஸ்தான், தமிழ்நாடு, அசாம், கர்நாடகா, கோவா ஆகிய 5 மாநிலங்களில் இன்னும் 269 கி.மீ. வழித்தடம் மட்டுமே மின்மயமாக்கல் பணியின் கீழ் உள்ளன.
புதிய பாதைகள் மற்றும் வழித்தட திட்டங்கள் அனைத்தும் தற்போது மின்மயமாக்கலுடன் சேர்த்தே அனுமதி அளிக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, விரைவில் 100 சதவீதம் மின்மயமாக்கல் என்ற சாதனையை எட்ட இருக்கிறது இந்திய ரயில்வே.
=================================