

வந்தே பாரத் ரயில்கள் :
வந்தே பாரத் ரயில்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது
இதனையடுத்து இந்த ரயில்களின் எண்ணிக்கையை மத்திய அரசு விரிவுபடுத்தி பல்வேறு வழித்தடங்களில்
இந்த ரயில்களின் எண்ணிகையை அதிகப்படுத்தி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது குறிப்பாக இந்த ரயில்களின் சேவையயை பிரதமர் மோடியே முன்வந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார் .
முதற்கட்டமாக இந்த ரயில்கள் முக்கிய வழித்தடங்களில் மட்டும் தான் இயக்கப்பட்டு வந்தன , அனால் இது மெதுவாக விறுவிவுபடுத்தப்பட்டு பல்வேறு மாநிலகங்களுக்கு செல்லும் வகையில் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன .
24 பெட்டிகளுடன் புதிய வடிவமைப்பு :
புதிய 24 பெட்டி ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயிலுக்கான வடிவமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதன் தயாரிப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
கூடுதல் பெட்டிகள் சேர்க்கப்படுவதன் மூலம் ஒரே நேரத்தில் அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.
பயணிகளுக்கு என்ன பலன் :
தற்போதுள்ள ரயில்களுடன் ஒப்பிடும்போது புதிய 24 பெட்டி வந்தே பாரத் ரயில்கள் அதிக இருக்கை வசதியை வழங்கும்.
இதனால் பயணச்சீட்டு கிடைப்பதில் ஏற்படும் சிரமங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் நீண்ட தூர பயணங்களில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளும் மேம்பட்ட பயண அனுபவமும் கிடைக்கும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அம்ரித் பாரத் ரயிலும் வருது :
இதனுடன், குறைந்த கட்டணத்தில் தரமான பயண வசதியை வழங்கும் வகையில் புதிய அம்ரித் பாரத் ரயில்களையும் இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது
இந்த அம்ரித் பாரத் ரயில்களில் உள்ள சிறப்பு என்னவென்றால் இதில் நடுத்தர வசதி கொண்ட மக்களும் பயணிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது .
சென்னை ஐசிஎஃப் மற்றும் ரயில்வே கோட்டத்தின் சாதனை :
சென்னையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ICF) கடந்த நிதியாண்டில் 3,405 ரயில் பெட்டிகளை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
இதேபோல் சென்னை ரயில்வே கோட்டமும் ரூ.5,038 கோடி வருவாய் ஈட்டி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.