நீங்க 10வது பாஸ் பண்ணியிருந்தா போதும்! : இந்திய ரயில்வேயில் வேலை : 6,500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்: முழு விவரம்!

இந்திய ரயில்வேயில் 6,500-க்கும் மேற்பட்ட டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10வது, ITI, டிகிரி படித்தவர்கள் ஜூலை 29-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Indian Railways Recruitment 2026 Tamil | RRB Technician 6500+ Jobs Notification
Indian Railways Recruitment 2026 Tamil | RRB Technician 6500+ Jobs Notificationsource:google
2 min read

Indian Railways Recruitment 2026 Tamil | RRB Technician 6500+ Jobs Notification

இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு

இன்றைய காலகட்டத்தில் அரசு வேலை என்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்நாள் கனவாக உள்ளது. இதற்காக பட்டப்படிப்பு முடித்த பலரும் தனியார் வேலைக்கு செல்லாமல்,அரசு வேலையைப் பெற முழு நேரமாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.

விண்ணப்பிக்க தகுதி விவரம்

அப்படிப்பட்ட தகுதிவாய்ந்த அரசு வேலை தேடும் இளைஞர்களுக்கு இந்திய ரயில்வே அமைச்சகம் தற்போது ஒரு பொன்னான வாய்ப்பை அறிவித்துள்ளது.

பெரிய அளவில் டிகிரி, பி.ஜி போன்ற தகுதிகள் இல்லாவிட்டாலும், பத்தாம் வகுப்பு படித்தவர்களும் ஐடிஐ முடித்தவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு வேலைவாய்ப்பு

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) டெக்னீஷியன் பிரிவில் 6,565 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆரம்பத்திலேயே நல்ல சம்பளத்துடன், மத்திய அரசு வேலை என்பதால் இளைஞர்கள் மத்தியில் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

பணியிடங்களின் விவரம் மற்றும் கல்வித்தகுதி

இந்த அறிவிப்பின் மூலம் டெக்னீஷியன் கிரேடு 1 சிக்னல் மற்றும் டெக்னீஷியன் கிரேடு 3 ஆகிய பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  1. டெக்னீஷியன் கிரேடு 1 சிக்னல்

    இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc அல்லது பொறியியல் ( பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  2. டெக்னீஷியன் கிரேடு 3

    இப்பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், NCVT/SCVT அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு பிரிவில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு மற்றும் சம்பள விவரம்

  1. டெக்னீஷியன் கிரேடு 1 சிக்னல் பதவிக்கு

    18 முதல் 36 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்குத் தேர்வாகும் நபர்களுக்கு பே லெவல் 5-ன்படி மாதம் ரூ. 29,200 ஆரம்பச் சம்பளமாக வழங்கப்படும்.

  2. டெக்னீஷியன் கிரேடு 3 பதவிக்கு

    18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பதவிக்குத் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ. 19,900 ஆரம்பச் சம்பளமாகக் கிடைக்கும்.

மத்திய அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (SC/ST/OBC/மாற்றுத்திறனாளிகள்) வழக்கமான வயது வரம்பு தளர்வுகள் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் பின்வரும் மூன்று முக்கியக் கட்டங்களின் அடிப்படையில் இறுதித் தேர்வுக்கு தகுதி செய்யப்படுவார்கள்:

  1. கணினி அடிப்படையிலான தேர்வு

  2. சான்றிதழ் சரிபார்ப்பு

  3. மருத்துவப் பரிசோதனை

  4. விண்ணப்பிக்கும் தேதி மற்றும் வழிமுறைகள்

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

  1. விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: ஜூன் 30

  2. விண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஜூலை 29

விண்ணப்பிக்கும் முறை

தகுதியானவர்கள் ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.rrbcdg.gov.in பக்கத்திற்கு சென்று, உரிய வேலைவாய்ப்பு லிங்க்கை க்ளிக் செய்ய வேண்டும்.

அங்கு தங்களின் தனிப்பட்ட விவரங்களைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். இறுதியாக விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, படிவத்தை சமர்ப்பிக்கலாம்.

கடைசி நேர தொழில்நுட்ப கோளாறுகளைத் தவிர்க்க, தகுதியான விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே விண்ணப்பிப்பது நல்லது.

======

logo
Thamizh Alai
www.thamizhalai.in