

Indian Teacher Rouble Nagi Wins Global Teacher Prize 2026 : 8 கோடியே 30 லட்சம் பதிப்பிலான சர்வதேச ஆசிரியர் விருது.. இந்தியாவே பெருமைகொள்ளும் கல்வியாளர் ரூபிள் நகி யார் தெரியுமா?
யார் இந்த ரூபிள் நகி
ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த கல்வியாளர், ஆசிரியர் ரூபிள் நகி. ஏழை எளிய மக்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும். கல்வி கிடைக்காமல் ஒரு குழந்தை கூட பாதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் பல தன்னார்வ பயிற்று மையங்களை உருவாக்கி நடத்தி வருகிறார்.
ஓவியப் பயிற்சி மையம்
மேலும் மும்பையில் வறுமை நிலையில் உள்ள மாணவர்களுக்காக ஓவிய பயிற்சி மையத்தையும் நடத்தி வருகிறார்.
கற்றலை தீவிரப்படுத்த முடிவு
ரூபிள் நகி வறுமையின் காரணமாக பள்ளிக்கு செல்லாத அனைத்து குழந்தைகளையும் கற்க வைக்க வேண்டும் என்பதையும், பள்ளியில் ஏற்கெனவே படித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு கூடுதலாக படிப்பு, கலை முதலானவற்றில் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு அதை செயல்படுத்தியும் வருகிறார்.
800 கற்றல் மையங்கள்
அதன்படி தற்போது வரை 800க்கும் மேற்பட்ட கற்றல் பயிற்று மையங்களைத் தொடங்கி சிறப்பான முறையில் செயல்படுத்தியும் வருகிறார்.
மும்பையில் மட்டும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் வீடுகளை சுவரோவியம் மூலம் புதுப்பித்துக் காட்டியுள்ளார். அதுமட்டுமின்றி தற்போது நாடு முழுவதும் 160க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அங்குள்ள குடிசைப் பகுதிகளிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
சர்வதேச ஆசிரியர் விருது
ஏழை எளிய மக்களின் நலனுக்காக தொடர்ந்து செயல்படும் ரூபிள் நகியை கொளரவிக்கும் விதமாக அவருக்கு எட்டு கோடியே முப்பது லட்சம் மதிப்புமிக்க சர்வதேச ஆசிரியருக்கான விருது அறிவிக்கப்பட்டது.
இந்த விருதை துபாயில் நடைபெற்ற பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாட்டில், துபாய் இளவரசர் ஷேக் ரஷீத் அல் மக்தூமிடம் இருந்து ரூபிள் நகி பெற்றுக் கொண்டார்.
விருது பெற்றவுடன் ரூபிள் சொன்னது
சர்வதேச ஆசிரியர் விருது பெற்றவுடன் ரூபிள் நகி இந்த உயரிய விருதானது தனக்கும், இந்தியாவிற்கும் கிடைத்த மிகப்பெரிய பெருமை என்று கூறியுள்ளார்.
மேலும் தான் இந்த பயணத்தை 30 குழந்தைகளுடன் 24 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியதாகவும், 30 குழந்தைகளில் தொடங்கிய இந்த பயணம் தற்போது கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளோடு பயணிக்கிறது என்றும் நெகிழ்ந்து பேசியுள்ளார்.
பரிசுத் தொகையை எதற்காக பயன்படுத்த திட்டம்
சர்வதேச ஆசிரியர் விருதுடன் தனக்கு கிடைத்த எட்டு கோடியே முப்பது லட்சத்தையும் வைத்து இலவச தொழிற்பயிற்சி நிறுவனத்தை உருவாக்கப்போவதாக ரூபிள் நகி கூறியுள்ளது
அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. ரூபிள் நகியின் இந்த சேவை மனப்பான்மையை பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
====