
தீபத் திருநாளாம் தீபாவளி
GST 2.0 Boost: India's Diwali Sales Cross Record Rs 6 Lakh Crore, 25% more than Last Year,: தீபத் திருநாளாம் தீபாவளி இந்தியாவில் கொண்டாடப்படும் பெரிய விழாக்களில் ஒன்று. நரகாசுரனை சத்யபாமாவின் துணையோடு கிருஷ்ணர் வதைத்த தினமாகவும், ராவணனை வீழ்த்திய ராமபிரான் சீதையோடு அயோத்திக்கு திரும்பிய தினமாகவும் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு, பட்டாசு என விருப்பப்பட்டதை வாங்கி மக்கள் பண்டிகையை கொண்டாடுவார்கள்.
கொண்டாடி தீர்த்த மக்கள்
அந்த வகையில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை வசிக்கும் மக்கள் புத்தாடை உடுத்தியும், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை உற்றார், உறவினர்களுடன் பகிர்ந்தும் தீபாவளி கொண்டாடி தீர்த்தார்கள். புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் மட்டுமின்றி தங்க, வைர நகைகள், கார்கள், பைக்குகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை மக்கள் வாங்கி குவித்தனர்.
தீபாவளிக்கு ரூ.6.5 லட்சம் கோடிக்கு விற்பனை
இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி விற்பனை ரூ.6.05 லட்சம் கோடியைத் தொட்டு புதிய சாதனை படைத்து இருக்கிறது. 87 சதவீத மக்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்கி இருக்கிறார்கள்.அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு இதை உறதி செய்திருக்கிறது. புள்ளி விவரங்கள்படி, மொத்த வர்த்தகத்தை பொருத்தவரை 5.40 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருட்கள் வாங்கப்பட்டு இருக்கின்றன. 65,000 கோடி ரூபாய் சேவைகள் மூலம் பொருட்கள் வாங்கப்பட்டு இருக்கின்றன. இந்திய வர்த்தக வரலாற்றில் தீபாவளியின் பொது உச்சப்பட்ச வணிகமாக 2025ம் ஆண்டு பதிவாகி இருக்கிறது.
கடந்த ஆண்டை விட 25% அதிகம்
CAIT ஆராய்ச்சி மற்றும் வர்த்தக மேம்பாட்டு சங்கம், நாடு முழுவதும் 60 முக்கிய விநியோக மையங்களில், மெட்ரோ நகரங்கள், மாநில தலைநகரங்கள் மற்றும் பெரிய மற்றும் சிறியர நகரங்களில் நடத்திய விரிவான ஆய்வை அடிப்படையாகக் கொண்டு இந்த புள்ளி விவரங்கள் கிடைத்து இருக்கிறது. கடந்த ஆண்டு தீபாவளியின் போது ரூ.4.25 லட்சம் கோடிக்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு வர்த்தகம், 6.05 லட்சம் கோடி ரூபாய் என்ற வகையில் 25 சதவீதம் அளவுக்கு கூடுதல் விற்பனையாகி சாதனை படைத்து இருக்கிறது.
சுதேசி பொருட்கள் இந்தியர்களின் நாட்டுப்பற்று
அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி விதிப்பால், இந்திய பொருளாதாரம் தள்ளாட்டம் கண்டு விடும் என்று, அதிபர் டொனால்டு டிரம்ப் கனவு கண்டு வந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, 140 கோடி இந்தியர்களும் உள்நாட்டு பொருட்களை தீபாவளிக்காக வாங்கி, உற்பத்தியாளர்கள், வர்த்தகர்களுக்கு கைகொடுத்து இருக்கிறார்கள். ஒற்றுமையே இந்தியாவின் வலிமை, எத்தகைய நிர்பந்தங்களும் இந்தியர்களை அடிபணிய வைக்க முடியாது, எதையும் இந்திய மக்கள் சாதித்து காட்டுவார்கள் என்பதை தீபாவளி பண்டிகை உலகிற்கே உணர்த்தி இருக்கிறது.
=====================