USA 50% வரி விதிப்பு : ரூ.2,500 கோடிக்கு தங்க ஏற்றுமதி பாதிப்பு
25 %வரி + 25 % அபராத வரி :
இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால், 25 சதவீத அபராத வரி என்று, அமெரிக்க கெடுபிடி காட்டி அமல்படுத்தி இருக்கிறது. இதன் தாக்கம் ஏற்றுமதி துறையில் எதிரொலிக்க தொடங்கி இருக்கிறது.
அமெரிக்காவில் குறையும் இந்திய பொருட்கள் :
ஜவுளி, ஆயத்த ஆட்கள், இயந்திரங்கள், மருந்து பொருட்கள், ஆயத்த உணவு வகைகள் உள்ளிட்டவை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வது குறைக்கப்பட்டு விட்டது. ஆர்டர்களை ரத்து செய்யுமாறு அமெரிக்க நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன. காரணம் 50 சதவீத வரியால், கூடுதல் விலைக்கு இந்திய போருட்களை விற்க வேண்டியிருக்கிறது.
தங்க நகைகள் ஏற்றுமதி :
இந்தச்சூழலில், 50 சதவீத வரி விதிப்பு தங்க நகைகள் தயாரிப்பையும் பாதிக்க தொடங்கி விட்டது. இந்தியாவில் கோவை, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தங்க நகைகள் அமெரிக்கவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்தாண்டு மட்டும் 19.9 பில்லியன் அளவுக்கு அமெரிக்காவுக்கு தங்க நகைகள் ஏற்றுமதி ஆகின.
இந்திய நகைகள் விலை அதிகரிப்பு :
ஆனால், 50 சதவீத வரி விதிப்பால், இந்த ஆண்டு அந்த அளவுக்கு இருக்குமா என்று நிச்சயமாக கணிக்க முடியவில்லை என்கின்றனர் நிபுணர்கள். தற்போது ஒரு சவரன் தங்கம் 75 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்கப்படுகிறது. இதன் மீது 50 சதவீத வரி திணிக்கப்பட்டால், இந்திய நகைகளை யாரும் வாங்க முன் வரமாட்டார்கள் என்பதே உண்மை.
அமெரிக்காவுக்கு தங்க நகைகளை ஏற்றுமதி செய்யும் ஆர்டர்களும் நிறுத்தப்பட்டு விட்டன. கோவை மாவட்டத்தில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய் அளவுக்கு தங்க நகைகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மீட்டெடுக்கப்படுமா நகை விற்பனை :
இது தடைபட்டால், நகை தயாரிப்பாளர்கள், வியாபாரிகள் பெரும் இழைப்பை சந்திக்க வேண்டி இருக்கும். வரி பிரச்சினைக்கு ஓரிரு வாரங்களில் தீர்வு கிடைத்தால் மட்டுமே, நகை தொழிலை மீட்டெடுக்க முடியும் என்கிறார்கள் வணிகர்கள்.
================