

India's New Leap in Space! 'Super Pressure Balloons' Set to Replace Satellites!
ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தொழில்நுட்ப புரட்சி
விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளை வியக்க வைக்கும் வகையில், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் புதிய தொழில்நுட்பப் புரட்சியை முன்னெடுத்துள்ளது.
'சூப்பர் பிரஷர் பலூன்'
விமானங்களால் எட்ட முடியாத உயரம் மற்றும் செயற்கைக்கோள்கள் செயல்பட முடியாத தாழ்வான பகுதிக்கு இடைப்பட்ட 'Near Space' மண்டலத்தை இலக்காகக் கொண்டு, இந்தியாவின் முதல் 'சூப்பர் பிரஷர் பலூன்' உருவாக்கப்பட்டுள்ளது.
அதிநவீனத் தொழில்நுட்பம்
விஜயவாடாவைச் சேர்ந்த 'ரெட் பலூன் ஏரோஸ்பேஸ்' நிறுவனம் இந்த வானூர்தியை வடிவமைத்துள்ளது. பொதுவாக வானிலை பலூன்கள் உயரே செல்லச் செல்ல காற்றில் விரிவடைந்து வெடித்துவிடும்.
எவ்வளவு உயரத்திலும் நிலைத்து நிற்கும் திறன்
ஆனால், இந்த சூப்பர் பிரஷர் பலூன் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும் தனது வடிவத்தை மாற்றாமல், வெடிக்காமல் நீண்ட காலத்திற்கு வானில் நிலைத்து நிற்கும் திறன் கொண்டது.
குறைந்த செலவு - கூடுதல் பயன்
இது குறித்து அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ டாக்டர் சி.வி.எஸ். கிரண் கூறுகையில், "கோடிக்கணக்கான ரூபாய் செலவில் பல ஆண்டுகள் காத்திருந்து செயற்கைக்கோள்களை ஏவுவதற்குப் பதிலாக, இந்த பலூன் தொழில்நுட்பத்தை வெறும் சில வாரங்களிலேயே விண்ணில் நிறுத்திவிட முடியும்.
பலூனின் தனிச்சிறப்பு
இதில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் மீண்டும் தரைக்குக் கொண்டு வந்து சரிசெய்துவிட்டு மறுபடியும் பயன்படுத்தலாம் என்பது இதன் தனிச்சிறப்பு" என்றார்.
தொடர்புத் துறையில் புரட்சி
இந்த மெகா பலூன் மூலம் செல்போன் டவர்களே இல்லாத மலைக்கிராமங்கள் மற்றும் அடர்ந்த காடுகளுக்கு அதிவேக இணையச் சேவையை வழங்க முடியும்.
துல்லியமான புகைப்படங்கள்
மேலும், புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது மீட்புப் பணிகளுக்குத் தேவையான 25 முதல் 75 செ.மீ வரையிலான துல்லியமான புகைப்படங்களை இது வழங்கும்.
அதிகாரப்பூர்வ முத்திரை பதிக்க தயாராகும் இந்தியா
கூகுள் மற்றும் அமெரிக்க ராணுவம் மட்டுமே இதுவரை பயன்படுத்தி வந்த இந்தத் தொழில்நுட்பத்தில், தற்போது இந்தியாவும் அதிகாரப்பூர்வமாகத் தனது முத்திரையைப் பதிக்கத் தயாராகிவிட்டது.
=====