
ஆப்பிளின் நவீன செல்போன்கள் :
உலகின் முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். புதிய தொழில்நுட்ப வசதிகள், க்ளாசிக்கான வடிவமுமே ஆப்பிள் போன்கள் மீதான ஈர்ப்புக்கு காரணம்.
புதிய மாடல் போன்கள் அறிமுகம் :
Apple iPhone 17 series officially launched in India : ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் நடத்தும் வருடாந்திர நிகழ்வில் புதிய மாடல் ஆப்பிள் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச், ஏர்பாட்கள் என பல்வேறு கேட்ஜெட்கள் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், கலிஃபோர்னியாவின் குப்பர்டினோ நகரில் உள்ள ஆப்பிள் பார்க்கில் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 17 சீரிஸ் மாடல் ஐபோன்கள் நேற்று வெளியிடப்பட்டன.
ஐபோன் 17 சீரிஸ் - நான்கு மாடல்கள் :
iPhone 17, iPhone Air, iPhone 17 Pro and iPhone 17 Pro Max : ஐபோன் 17 சீரிஸ் வரிசையில் ஐபோன் 17, ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மற்றும் ஐபோன் 17 ஏர் என நான்கு மாடல் போன்கள் அறிமுகமாகி உள்ளன. இவை இந்தியாவில் இன்று அறிமுகமாகி உள்ளன. ரூபாய் மதிப்பில் ஐபோன் 17 மாடல்களின் விலை ரூ.89,000 முதல் தொடங்கும் என தகவல் தெரிவிக்கின்றன.
கடைகள் முன்பு மக்கள் கூட்டம் :
மும்பை பிகேசி ஆப்பிள் ஸ்டோர் முன்பு மக்கள் குவிந்து வருகின்றனர். நீண்ட வரிசையில் வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நவீன வசதிகளுடன் ஐபோன் 17 :
ஐபோன் 17ல் 120Hz வரை திரை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 6.3 இன்ச் சூப்பர் ரெடினா XDR திரையுடன்புதிய செராமிக் ஷீல்ட் 2 கொண்டுள்ளது. அதனால், கீழே விழுந்து கீறல் ஏற்படும் சமயங்களில், மூன்று மடங்கு பாதுகாப்பு கொண்ட ஸ்கிரினாக இது அமையும். A19 சிப்பால் இயக்கப்படும் ஐபோன் 17, 256GB டேட்டா ஸ்டோரேஜுடன் தொடங்குகிறது.
2x டெலிஃபோட்டோவுடன் கூடிய 48MP ஃப்யூஷன் மெயின் கேமரா மற்றும் மேக்ரோ புகைப்படங்களை எடுக்க உதவும் வகையில் 48MP ஃப்யூஷன் அல்ட்ரா வைட் கேமரா ஆகியவை உள்ளன. கருப்பு, லாவெண்டர், மிஸ்ட் ப்ளூ, சேஜ் (சாம்பல்-பச்சை) மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு வந்திருக்கிறது.
இந்தியாவில் விலை நிர்ணயம் :
17 சீரிஸ் மாடல் ஐபோன் வகைகளுக்கான முன்பதிவு செப்டம்பர் 12ம் தேதி தொடங்கிய நிலையில், இன்று முதல் சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கிறது.
1. ஐபோன் 17: 256GB ரூ.82,900க்கும், 512GB ரூ.1,02,900க்கும் விற்பனை
2. ஐபோன் 17 ஏர்: 256GB ரூ.1,19,900க்கும், 512GB ரூ.1,39,900க்கும், 1TB ரூ.1,59,900க்கும் விற்பனை
3. ஐபோன் 17 ப்ரோ: 256GB ரூ.1,34,900க்கும், 512GB ரூ.1,54,900க்கும், 1TB ரூ.1,74,900க்கும் விற்பனை
4. ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்: 256GB ரூ.1,49,900க்கும், 512GB ரூ.1,69,900க்கும், 1TB ரூ.1,89,900க்கும், 2TB ரூ.2,29,900க்கும் விற்பனைக்கு வந்து இருக்கிறது.
============