ஈரான்- அமெரிக்கா மோதல்
ஈரான் இஸ்ரேல், அமெரிக்கா மோதலால் ஈரான் மூத்த தலைவர் கமேனி கொல்லப்படத்தை அடுத்து மோதலானது தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.
காமேனி இறப்பு எதிரொலி இந்தியாவில் தொடரும் போராட்டம்
ஈரான் தலைவர் காமேனி கொல்லப்பட்டதை கண்டித்து ஈராக் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஷியா பிரிவு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பதற்றமான சூழல் நிலவி வ்ருகிறது .குறிப்பாக இந்தியாவில் ஜம்மு காஷ்மீர், பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் போராட்டமானது நடைபெற்று வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்
மத்திய உள்துறை அமைச்சகமானது மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர்களுக்கு (DGP) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஷியா பிரிவு அமைப்புகள் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்கள் போராட்டங்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. எனவே, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் தூதரகங்களுக்குப் பலத்த பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கண்காணிப்பை அதிகப்படுத்த எச்சரிக்கை
சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் மற்றும் சுற்றுலாத் தலங்கள், வெளிநாட்டினர் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் வன்முறையைத் தூண்டும் கருத்துகளைக் கண்காணிக்கவும் தீவிரமாக கவனிக்கவும் உத்தரவானது அறிவிக்கப்பட்டுள்ளது