
இஸ்ரேல் - ஹமாஸ் சண்டை
PM Modi Praises Donald Trump's Israel Hamas War Ceasefire : பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இரண்டு ஆண்டு காலமாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது.
போர் நிறுத்தம் - இருதரப்பும் சம்மதம்
போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்ட இஸ்ரேல், டிரம்ப் முன்வைத்த(Donald Trump Proposal) திட்டங்களையும் ஏற்றுக் கொண்டது. ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கைவிட்டால், தாக்குதல் நிறுத்தப்படும் என்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Israel PM Benjamin Netanyahu) உறுதியளித்தார். இதை பரிசீலித்த ஹமாஸ் அமைப்பும், டிரம்பின் போர் நிறுத்த திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்து இருக்கிறது.
காசாவில் குண்டு சத்தம் ஓய்ந்தது
இதையடுத்து காசாவில் தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா உத்தரவிட்டு இருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு காசா பகுதியில் குண்டு சத்தம் ஓய்ந்து வருகிறது. இது முழுமையாக நீடித்து, மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதிபர் டிரம்பிற்கு பிரதமர் மோடி பாராட்டு
அதிபர் டிரம்பின் முன்னெடுப்புக்கு கிடைத்துள்ள வெற்றியை பிரதமர் நரேந்திர மோடி(Narendran Modi on Donald Trump) வரவேற்று இருக்கிறார். இது குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”காசாவில் அமைதி கொண்டு வரும் முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வரும் நிலையில், அதற்கு தலைமை வகித்து அதிபர் டிரம்ப் மேற்கொண்ட பணிகளை நாங்கள் வரவேற்கிறோம்.
மேலும் படிக்க : ’Modi Welcomes’ : டிரம்பின் காசா போர்நிறுத்த முயற்சிக்கு வரவேற்பு
அமைதியை முயற்சியை இந்தியா ஆதரிக்கும்
பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிக்கும் முடிவு, மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் முன்னேற்றத்தை குறிக்கிறது. நியாயமான முறையில், அமைதியை நோக்கி எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும்” என்று அந்தப் பதிவில் பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார்.
=====