புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் : 30ம் தேதி செலுத்துகிறது இஸ்ரோ

ISRO Launch Earth Observation NISAR Satellite : புவி கண்​காணிப்​புக்​காக நாசாவுடன் இணைந்து இஸ்ரோ உரு​வாக்​கிய செயற்​கைக்​கோள் ஜூலை 30ம் தேதி இந்தியா விண்​ணில் செலுத்துகிறது.
ISRO Launch Earth Observation NISAR Satellite with NASA
ISRO Launch Earth Observation NISAR Satellite with NASAhttps://x.com/isro?
1 min read

விண்வெளியில் சாதிக்கும் இந்தியா :

ISRO Launch Earth Observation NISAR Satellite : விண்வெளி ஆய்வில் இந்தியா தொடர்ந்து சாதித்து வருகிறது. அந்த வகையில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று விட்டு கடந்த வாரம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார். இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு அவரது பயணம் பேருதவியாக இருக்கும். அடுத்த கட்டமாக விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்ப உள்ள இந்தியா, வருங்காலத்தில், விண்வெளி மையம் ஒன்றை கட்டமைக்கவும் திட்டமிட்டு இருக்கிறது.

ராக்கெட் செலுத்துவதில் இந்தியா நிபுணத்துவம் :

ஏவுகணை நாயகர், முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல்​கலாமின் 10வது ஆண்டு நினைவு தினத்​தையொட்டி ராமேசுவரத்​தில் கலாம் நினைவு கருத்​தரங்​கம் நடை​பெற்​றது. இதில் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற இஸ்ரோ தலை​வர் நாராயணண், ”சந்​திரனுக்கு விண்​கலத்தை அனுப்​பும் அளவுக்கு இஸ்ரோ பிரம்​மாண்​ட​மாக வளர்ச்சி அடைந்​துள்​ளது. 35 கிலோ ராக்​கெட்​டில் தொடங்கி 75 ஆயிரம் கிலோ எடை கொண்ட ராக்​கெட்டை விண்​வெளிக்கு அனுப்​பும் வல்​லமை​யைப் பெற்​றுள்​ளது. இது சுமார் 40 மாடி உயரம் கொண்ட ராக்​கெட் ஆகும்.

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் :

புவி கண்​காணிப்​புக்​காக நாசாவுடன் இணைந்து உரு​வாக்​கிய அதிநவீன சிந்​தடிக் அப்​பர்​சர் ரேடார் செயற்​கைக்​கோளை (NASA-ISRO Synthetic Aperture Radar) ஜிஎஸ்​எல்வி ராக்​கெட் மூல​மாக இஸ்ரோ ஜூலை 30ம் தேதி விண்​ணில் செலுத்​துகிறது. இது ஜிஎஸ்​எல்வி எஃப்-16 வரிசை​யில் 18வது ராக்​கெட் இது. இறு​திக்​கட்ட பணி​களில் இஸ்ரோ விஞ்​ஞானிகள் ஈடு​பட்​டுள்​ளனர். இந்த செயற்​கைக்​கோள் நிலநடுக்​கம், புயல், பெரு​மழை உள்​ளிட்ட பேரிடர்​கள் குறித்த துல்​லிய​மான தகவல்​களைப் பகிரும் திறன் கொண்டதாகும்.

நடப்பாண்டில் 12 ராக்கெட்டுகள் :

இஸ்ரோ நடப்​பாண்டு 12 ராக்​கெட்​களை விண்​ணில் ஏவ உள்​ளது. ரோபோவுடன் கூடிய ககன்​யான் ஜி-1 ஆளில்லா செயற்​கைக்​கோளை டிசம்​பரில் அனுப்ப திட்​ட​மிட்​டு இருக்கிறோம். இந்​திய விண்​வெளி வீரரை ராக்​கெட் மூலம் விண்​ணுக்கு அனுப்​பி, மீண்​டும் பூமிக்கு அழைத்து வரும் ஆராய்ச்​சிகளை இஸ்ரோ முடித்​துள்​ளது. அப்​துல் கலாம் கூறியது ​போல இந்​தியா தனது 100-வது சுதந்​திர ஆண்​டில் (2047ல்) வல்​லர​சாக மாறும்” இவ்​வாறு நாராயணன் கூறி​னார்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in