சந்திராயன் 4 திட்டத்திற்கு அனுமதி
ISRO identify site for Chandrayaan-4 lander : 'சந்திரயான் - 3' திட்ட வெற்றியைத் தொடர்ந்து, நிலவின் தென் துருவப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள, 'இஸ்ரோ' முடிவு செய்துள்ளது.
பூமிக்கு திரும்பும் வகையில் சந்திரயான்
இத்திட்டத்துக்கு, 'சந்திரயான் - 4' என பெயரிடப்பட்டது. ஆனால் இது, 'சந்திரயான் - 3' போலில்லாமல், நிலவின் மண்ணை சேகரித்து மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் திட்டம். 'சந்திரயான் - 4' திட்டத்தில், உந்துவிசை தொகுதி, தரையிறங்கும் தொகுதி, மேலேறும் தொகுதி, மாற்றும் தொகுதி, மீண்டும் நுழைவு தொகுதி -இது மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பும் ஆகியவை இடம் பெற உள்ளன.
2028ல், 'சந்திரயான் - 4' திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ள நிலையில், மத்திய அரசும் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.
விண்கலம் இறக்க இடத்தை உறுதி செய்த இஸ்ரோ
இந்நிலையில், 'சந்திரயான் - 4' திட்டத்தில், நிலவின் தென் துருவப் பகுதியில் விண்கலம் தரையிறங்குவதற்கான இடத்தை இஸ்ரோ அடையாளம் கண்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தில் உள்ள எம்.எம்., எனப்படும், 'மான்ஸ் மவுட்டன்' என்ற பகுதியில் இந்த விண்கலம் தரையிறங்க உள்ளது. இதற்காக நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், எம்.எம்., 4 என்ற இடத்தை இஸ்ரோ உறுதி செய்துள்ளது.
தடைகள் குறைவாக உள்ள இடத்தில் இறக்கம்
எம்.எம்., 4 பகுதியில் பள்ளங்கள் மற்றும் பாறைகள் போன்ற தடைகள் மிகக் குறைவாக உள்ளதால் நிலப்பரப்பின் சராசரி சாய்வாக, 5 டிகிரி மட்டுமே.
இது விண்கலம் நிலைத்தடுமாறாமல் தரையிறங்க உதவும் உயர் ரக கேமரா மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்ததில் இந்த பகுதி தகுந்த இடமாக தேர்வாகி தற்போது, விண்கலத்தை தரையிறங்குவதற்கு இடம் கிடைத்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது.